Thursday, November 12
Shadow

அன்பும் ஆதரவும் அளித்த அனைவரின் வாழ்த்துகளுடன் புதிய வாழ்க்கையைத் தொடங்கிய நடிகை ப்ரியா – ராஜ் தம்பதி!

அன்பும் ஆதரவும் அளித்த அனைவரின் வாழ்த்துகளுடன் புதிய வாழ்க்கையைத் தொடங்கிய நடிகை ப்ரியா – ராஜ் தம்பதி!

நவம்பர் 11ஆம் தேதி குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது – பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த ப்ரியா!

நடிகை ப்ரியா, ராஜ் என்பவரை நவம்பர் 11ஆம் தேதியான இன்று திருமணம் செய்துகொண்டார். குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் எளிமையான, அதேசமயம் மகிழ்ச்சியும் அன்பும் நிறைந்த நிகழ்வாக இந்தத் திருமணம் நடைபெற்றது.

தனது திருமணம் குறித்த மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துள்ள ப்ரியா, பல ஆண்டுகளாகத் தனது பயணத்தில் அன்பும் ஆதரவும் அளித்து வரும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தனது திரைப்பயணம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையின் முக்கியமான தருணங்களில் ஊடக நண்பர்கள் தொடர்ந்து ஆதரவாக இருந்ததையும், தனது மகிழ்ச்சியான தருணங்களைத் தங்களுடையதாகக் கருதி கொண்டாடியதையும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்ற சிறிய அளவிலான திருமண நிகழ்வாக இதனை ஏற்பாடு செய்ததால், அனைவரையும் நேரில் அழைக்க இயலவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தங்களுடைய இந்தப் புதிய வாழ்க்கைப் பயணத்தில் அனைவரின் அன்பும், வாழ்த்துகளும், ஆசீர்வாதங்களும் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என ப்ரியா – ராஜ் தம்பதியினர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

புதிய இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைத்துள்ள ப்ரியா – ராஜ் தம்பதியினருக்கு திரையுலகினர், பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ப்ரியா – ராஜ் தம்பதியினருக்கு இனிய திருமண நல்வாழ்த்துகள்!

Actress Priya Marries Raj in an Intimate Ceremony; Expresses Heartfelt Gratitude to Media Friends

Actress Priya has embarked on a new chapter in her life by marrying Raj on November 11. The wedding took place in a beautiful and intimate ceremony attended by family members and close friends.

Sharing the happy news, Priya expressed her heartfelt gratitude to members of the press and media fraternity for their constant love, encouragement and support throughout her journey.

In her message, Priya acknowledged the special bond she shares with media professionals, highlighting how they have been an integral part of her journey, celebrating her professional milestones and sharing in some of the happiest moments of her life.

She also explained that the wedding was planned as a private celebration with only family members and close friends in attendance, which made it difficult to personally invite everyone.

Expressing her happiness and appreciation, Priya said that she and Raj look forward to carrying the love, affection and blessings of everyone into their new journey together.

As the couple begins this beautiful new chapter, wishes and congratulations are pouring in from well-wishers.

Heartfelt congratulations to Priya and Raj on their wedding!