
திரைப்பட அனுபவத்தைத் தரும் காதல் இசைப் பயணம்… ஹரிசங்கர் – ஷாரி கூட்டணியில் உருவான ‘நீயும் நானும்’ இருமொழி ஆல்பம்!
தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் புதிய மியூசிக்கல் ஆல்பம்!
ஒரு பாடல் என்பது இசையையும் காட்சிகளையும் மட்டும் கொண்டிருக்க வேண்டியதில்லை; மனதைத் தொடும் ஒரு கதையையும் சொல்ல முடியும். அப்படியொரு அழகான காதல் கதையை இசையுடன் இணைத்து, முழுநீளத் திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கியிருக்கிறது ‘நீயும் நானும்’ மியூசிக்கல் ஆல்பம்.
‘நடுவன்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சரண் என்கிற ஷாரி, நடிகர் ஹரிசங்கர் நாராயணனுடன் இணைந்து உருவாக்கியுள்ள இந்த ஆல்பம், இன்டி மியூசிக் உலகில் புதிய முயற்சியாக அமைந்துள்ளது. Hidden Talent Studios தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படைப்பு, தமிழில் ‘நீயும் நானும்’ என்றும், மலையாளத்தில் ‘ഞാനും’ (Njyaanum) என்றும் இரு மொழிகளில் வெளியாகியுள்ளது. Saregama Music நிறுவனம் இந்தப் பாடலை வெளியிட்டுள்ளது.
இதுவரை பல திரைப்படங்களில் வில்லன் மற்றும் எதிர்மறையான கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஹரிசங்கர், இந்த ஆல்பத்தில் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் காதல் நாயகனாகக் களமிறங்கியுள்ளார். ‘லேபிள்’, ‘கட்டாளன்’, ‘டோரதி’, ‘சிறை’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அவர், இந்தப் பாடலில் தனது நடிப்பின் மற்றொரு பரிமாணத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கு ஜோடியாக சுஜா சுகுமார் நடித்துள்ளார்.
பேசவும், கேட்கவும் முடியாத இளைஞனின் அழகான காதல் கதை!
பேசவும், கேட்கவும் முடியாத ஓர் இளைஞன், தனது காதலி விரும்பும் இடங்களுக்கெல்லாம் அவளுடன் பயணம் செய்து, அவளது ஆசைகளை நிறைவேற்றுகிறான். வார்த்தைகளைக் கடந்து அன்பை வெளிப்படுத்தும் அந்த இளைஞனின் காதலும், இருவருக்கும் இடையிலான அழகான தருணங்களும்தான் இந்தப் பாடலின் மையக்கரு.
வெறும் கற்பனைக் கதையாக இதனை உருவாக்காமல், தங்களது சொந்தப் பயண அனுபவங்களில் சந்தித்த மனிதர்கள் மற்றும் அவர்களிடம் பார்த்த காதல் உணர்வுகளையும் இந்தப் படைப்பில் இணைத்திருக்கிறார் ஷாரி. பயணத்தின்போது மனதில் பதிந்த காதல் நினைவுகளை இசை மற்றும் காட்சிகளின் வழியாக ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த ஆல்பம் உருவாகியுள்ளது.
பல மாநிலங்களில் படமாக்கப்பட்ட காதல் பயணம்!
சென்னை, பெங்களூரு, கோவா, ஜெய்ப்பூர், சண்டிகர், சிம்லா, சாங்லா, சிட்குல் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு அழகிய பகுதிகளில் இந்தப் பாடல் படமாக்கப்பட்டுள்ளது. விமான நிலையம் உள்ளிட்ட பல இடங்களிலும் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு மியூசிக் வீடியோவுக்கான வழக்கமான படப்பிடிப்பாக இல்லாமல், திரைப்படத்துக்கான பிரம்மாண்டமான காட்சியமைப்புகளுடன் இதனை உருவாக்கியுள்ளனர்.
இசையமைப்பாளர் யுதிஷ்டரன் (Yuthishtran E) இசையமைத்துள்ள இந்தப் பாடலை ஹனன் ஷா (Hanan Shaah), நிஹால் சாதிக் (Nihal Sadiq) ஆகியோர் பாடியுள்ளனர். இனிமையான இசையும், காதலை அழகாக வெளிப்படுத்தும் காட்சிகளும் பாடலுக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளன.
குறிப்பாக, ஹரிசங்கரின் இயல்பான நடிப்பும், சுஜா சுகுமாரின் அழகான திரை வெளிப்பாடும் காதல் காட்சிகளுக்கு உயிரூட்டுகின்றன. தொடக்கம் முதல் இறுதிவரை ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் உணர்வை ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, பாடலின் இறுதியில் இடம்பெறும் எதிர்பாராத திருப்பம் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.
வழக்கமான காதல் பாடல்களின் பாணியிலிருந்து விலகி, இசை, காதல், பயணம், உணர்வுகள் என அனைத்தையும் ஒரே படைப்பில் இணைத்திருக்கும் ‘நீயும் நானும்’ தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஷாரி – ஹரிசங்கர் கூட்டணியில் உருவான இந்த இருமொழி இன்டி ஆல்பம், சுயாதீன இசை உலகில் குறிப்பிடத்தக்க முயற்சியாக அமைந்துள்ளது.
பாடலைக் காண:
தமிழ் –
மலையாளம் –
A Romantic Musical Journey That Feels Like a Feature Film! Harishankar Narayanan and Shari Join Hands for Bilingual Indie Album ‘Neeyum Naanum’
Released in Tamil and Malayalam, the musical album blends love, travel and emotions to offer audiences a cinematic experience.
A beautiful love story, scenic locations and soulful music come together in ‘Neeyum Naanum’, a new bilingual independent musical album that is winning the attention of music lovers. Directed by Sharan, popularly known as Shari, and featuring actor Harishankar Narayanan, the album offers much more than an ordinary music video, presenting an engaging romantic story through cinematic visuals.
Produced by Hidden Talent Studios, the album has been released in Tamil as ‘Neeyum Naanum’ and in Malayalam as ‘ഞാനും’ (Njyaanum). Released through Saregama Music, this collaboration marks the first time Shari and Harishankar Narayanan have come together for a bilingual independent music project.
Shari, who made his directorial mark with the film ‘Naduvan’ and has also acted as a lead in films such as ‘Inidhu Inidhu’, has directed this musical album. Harishankar, known for his performances in films including ‘Label’, ‘Kattalan’, ‘Dorothy’ and ‘Sirai’, plays the male lead, while Suja Sukumar plays the female lead.
A Love Story Told Beyond Words
At the heart of ‘Neeyum Naanum’ is the touching story of a young man who can neither speak nor hear. Determined to fulfil his girlfriend’s wishes, he takes her on a journey to all the places she dreams of visiting. The album beautifully captures their journey, highlighting their affection, aspirations and the unspoken emotions that strengthen their relationship.
Interestingly, the concept of the album draws inspiration from the real-life travel experiences of Shari and Harishankar. During their journeys, they encountered several people and witnessed beautiful expressions of love. Inspired by these experiences and memories, the duo decided to transform those emotions into a musical narrative.
Shot Across Multiple Beautiful Locations in India
The album has been filmed across several picturesque locations, including Chennai, Bengaluru, Goa, Jaipur, Chandigarh, Shimla, Sangla and Chitkul, along with airport locations. The team travelled extensively across India to capture the beauty of these destinations, creating visuals that have the scale and presentation of a feature film.
Music for the album has been composed by Yuthishtran E, while Hanan Shaah and Nihal Sadiq have lent their voices to the song. The soulful composition and visually appealing presentation enhance the romantic mood of the narrative.
Harishankar in a Refreshingly Different Avatar
Having predominantly appeared in villainous and negative roles in films, Harishankar presents himself in a completely different avatar as a romantic lead in this album. His portrayal captures the tenderness of love, his character’s affection for his girlfriend and his determination to fulfil her dreams. Suja Sukumar complements his performance with a natural and engaging screen presence.
Rather than following the conventional format of a music video, ‘Neeyum Naanum’ has been designed to give viewers the experience of watching a complete romantic film. The narrative progresses through beautiful moments of love and travel, while an unexpected twist towards the climax adds an element of surprise.
Bringing together music, romance, travel and heartfelt emotions, ‘Neeyum Naanum’ stands out as an interesting independent music venture. The bilingual album from the Shari–Harishankar combination is currently attracting attention and receiving a positive response from audiences.
Watch the Songs:
- Tamil Version:
- Malayalam Version:
