
ஆஸ்கர் களத்தில் இந்தியாவின் பெருமையாக ‘கோந்தல்’! – ஏழு மொழிகளில் உலகம் முழுவதும் நாளை வெளியாகிறது; இளையராஜா இசையில் சர்வதேச டிரெய்லர் வெளியீடு!
இந்தியாவின் 99-வது ஆஸ்கர் விருதுகளுக்கான அதிகாரப்பூர்வப் பரிந்துரையாகத் தேர்வாகியுள்ள இயக்குநர் சந்தோஷ் தாவகாரின் ‘கோந்தல்’ திரைப்படம், சர்வதேச அளவில் கவனம் ஈர்த்து வருகிறது. உளவியல் மர்மத் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் சர்வதேச டிரெய்லர் தற்போது வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இப்படம், நாளை (நவம்பர் 13) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் என ஏழு மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. ஒரு மராத்தி திரைப்படம் இத்தனை மொழிகளில் ஒரே நேரத்தில் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டைப் பெறுவது இதுவே முதல் முறை எனப் படக்குழு தெரிவித்துள்ளது. இந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, துபாய் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலும் இப்படம் திரையிடப்படவுள்ளது.
மகாராஷ்டிராவின் மண்ணையும், அதன் தொன்மையான கலாச்சாரப் பாரம்பரியத்தையும் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள ‘கோந்தல்’, புதுமணத் தம்பதிகளான சுமன் மற்றும் ஆனந்த்ராவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டுள்ளது. திருமண வாழ்க்கையின் எதிர்பார்ப்புகள், தனிப்பட்ட ஆசைகள், குடும்பக் கடமைகள், பக்தி எனப் பல்வேறு உணர்வுகள் ஒன்றோடொன்று மோதும்போது அவர்களின் வாழ்க்கையில் நிகழும் மர்மமான சம்பவங்களும் எதிர்பாராத திருப்பங்களுமே படத்தின் கதைக்களமாக அமைந்துள்ளன.
வெளிப்படையாகத் தெரியும் சம்பவங்களுக்குப் பின்னால் மறைந்திருக்கும் உண்மைகள் என்ன? மனிதர்களின் நம்பிக்கைகளுக்கும் உணர்வுகளுக்கும் இடையே உருவாகும் முரண்பாடுகள் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகின்றன? என்ற கேள்விகளை எழுப்பும் வகையில் படத்தின் காட்சிகள் அமைந்துள்ளன. குறிப்பாக, மர்மம், உளவியல் ரீதியான பதற்றம், உறவுகளின் சிக்கல்கள் எனப் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய சர்வதேச டிரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இப்படத்தின் மூலம் இந்தியக் கலாச்சாரத்தை உலக அரங்கில் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே தனது முக்கிய நோக்கம் என இயக்குநர் சந்தோஷ் தாவகார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்தியத் திரைப்படங்கள் குறித்த சர்வதேசப் பார்வை பெரும்பாலும் வறுமை மற்றும் சாதிய மோதல்களை மையமாகக் கொண்ட கதைகளின் வழியாகவே உருவாக்கப்படுகிறது. அவை நமது சமூகத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும், அவை மட்டுமே இந்தியாவின் முழுமையான அடையாளம் கிடையாது.
‘கோந்தல்’ ஒரு திரைப்படம் என்பதைத் தாண்டி, தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வரும் நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களின் வெளிப்பாடாக உருவாகியுள்ளது. இந்தப் பாரம்பரியத்தை உலகெங்கிலும் உள்ள மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஆஸ்கர் போன்ற சர்வதேச அங்கீகாரம் பெற்ற தளங்கள், இந்தியாவின் தனித்துவமான கலாச்சாரத்தை உலக நாடுகளுக்கு அறிமுகப்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்புகளை உருவாக்குகின்றன” என்றார்.
இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஆஸ்கர் பரிந்துரையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ‘கோந்தல்’, சிறந்த சர்வதேசத் திரைப்படப் பிரிவில் தனது பயணத்தைத் தொடர்ந்து வருகிறது. இதனுடன் பிற விருதுப் பிரிவுகளிலும் இப்படம் பரிசீலனையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 56-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் (IFFI) சிறந்த இயக்குநருக்கான மதிப்புமிக்க Silver Peacock விருதை சந்தோஷ் தாவகார் வென்றுள்ளார். ‘கோந்தல்’ திரைப்படத்தைப் பார்வையிட்ட நடுவர் குழுவினர், இதனை நிஜ உலகில் நிகழும் ஷேக்ஸ்பியர் நாடகத்தைப் போன்ற படைப்பு எனப் பாராட்டியிருப்பது படத்திற்குக் கூடுதல் கவனத்தைப் பெற்றுத் தந்துள்ளது.
இஷிதா தேஷ்முக், கிஷோர் கதம், யோகேஷ் சோஹானி, நிஷாத் போயர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தாவகார் ஃபிலிம்ஸ் சார்பில் இயக்குநர் சந்தோஷ் தாவகார் மற்றும் அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் தீக்ஷா தாவகார் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.
தொழில்நுட்ப ரீதியாகவும் பல்வேறு புதுமைகளுடன் இப்படம் உருவாகியுள்ளது. அமலேந்து சௌத்ரி ஒளிப்பதிவு செய்துள்ளார். குறிப்பாக, திரைப்படத்தின் தொடக்கத்திலேயே சுமார் 25 நிமிடங்கள் இடைவெளியின்றி ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட காட்சி இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இது படத்தின் காட்சியமைப்பிலும் உருவாக்கத்திலும் படக்குழு மேற்கொண்டுள்ள தனித்துவமான முயற்சியை வெளிப்படுத்துகிறது.
பிராந்திய மண்ணின் கதைகளை உலகளாவிய தரத்தில் சொல்ல முடியும் என்பதை நிரூபிக்கும் நோக்கத்துடன் உருவாகியுள்ள ‘கோந்தல்’, இளையராஜாவின் இசை, வலுவான நடிப்பு, மர்மம் நிறைந்த திரைக்கதை மற்றும் மகாராஷ்டிராவின் கலாச்சாரப் பின்னணி ஆகியவற்றின் வழியாக ரசிகர்களைச் சந்திக்கத் தயாராகியுள்ளது. ஆஸ்கர் அங்கீகாரத்தை நோக்கிய பயணத்தில் இருக்கும் இப்படம், நாளை முதல் உலகத் திரையரங்குகளில் தனது அடுத்த அத்தியாயத்தைத் தொடங்குகிறது.

‘Gondhal’ Takes India’s Oscar Journey to the Global Stage! Ilaiyaraaja’s Music-Driven Psychological Thriller to Release Worldwide in Seven Languages on November 13; International Trailer Unveiled
‘Gondhal’, directed by Santosh Davakhar and selected as India’s official entry for the 99th Academy Awards, is generating considerable international attention. The psychological mystery thriller has unveiled its international trailer, offering audiences a glimpse into its intriguing storyline, cultural backdrop and suspense-filled world. Featuring music by legendary composer Ilaiyaraaja, the film is set for a worldwide theatrical release on November 13.
The film will be released simultaneously in seven languages — Hindi, Marathi, Tamil, Telugu, Malayalam, Kannada and English. According to the makers, this is the first time a Marathi film is receiving a worldwide theatrical release across seven languages. Apart from India, the film will also reach audiences in the United States, the United Kingdom, European countries, Australia, Dubai and several African nations.
Set against the rich cultural traditions of Maharashtra, ‘Gondhal’ revolves around the lives of a newly married couple, Suman and Anandrao. Their relationship takes an unexpected turn as personal desires, marital expectations, social responsibilities and religious devotion collide, drawing them into a series of mysterious incidents.
As the couple finds themselves caught in an increasingly complicated situation, the film explores the hidden truths behind seemingly ordinary events. What lies beneath the surface of what people believe to be real? How do conflicting emotions, personal aspirations and social obligations shape human relationships? These questions form the psychological and emotional foundation of the film.
The international trailer showcases a compelling combination of suspense, psychological tension, mysterious developments and intricate human relationships, further building anticipation for the film.
Speaking about the film, director Santosh Davakhar said that his vision was to present India’s cultural identity to international audiences through cinema.
He stated, “The global perception of Indian cinema is often shaped by stories centred around poverty and caste conflicts. While these are undoubtedly part of our social reality, they do not represent the entirety of India’s identity.
‘Gondhal’ is more than just a film. It is a confluence of culture and traditions that have been passed down through generations. It gives me immense happiness to introduce this heritage to audiences across the world. International platforms such as the Academy Awards provide filmmakers with an opportunity to take India’s rich and diverse cultural identity beyond national boundaries.”
Selected as India’s official entry for the 99th Academy Awards, ‘Gondhal’ is continuing its journey in the Best International Feature Film category. The film is also reportedly being considered across several other award categories, marking another significant step towards international recognition.
Adding to the film’s achievements, Santosh Davakhar won the prestigious Silver Peacock Award for Best Director at the 56th International Film Festival of India (IFFI). The jury members reportedly praised the film, describing it as a Shakespearean story unfolding in the real world.
The film features Ishita Deshmukh, Kishore Kadam, Yogesh Sohani and Nishad Boyer in prominent roles. It is produced by director Santosh Davakhar along with Deeksha Davakhar, co-founder of their production banner, Davakhar Films.
On the technical front, the film brings together several noteworthy cinematic elements. Amalendu Chaudhary has handled the cinematography. One of the film’s major highlights is a sequence lasting approximately 25 minutes, captured in a single continuous shot right at the beginning of the film. This ambitious filmmaking approach reflects the team’s commitment to delivering a distinctive cinematic experience.
With its strong regional cultural roots, international storytelling appeal, Ilaiyaraaja’s music, compelling performances and intriguing psychological narrative, ‘Gondhal’ aims to take a unique Indian story to audiences worldwide.
As it continues its journey towards the Academy Awards, the film is all set to make its global theatrical debut on November 13, bringing the cultural richness of Maharashtra to the international big screen.
