Friday, November 13
Shadow

ரசிகர்களை ஆட்டிப்படைக்கும் ஷாருக்கானின் ‘து மில் ஜாயே’… ஆர்மேக்ஸ் தரவரிசையில் நம்பர் 1 இடம்!

ரசிகர்களை ஆட்டிப்படைக்கும் ஷாருக்கானின் ‘து மில் ஜாயே’… ஆர்மேக்ஸ் தரவரிசையில் நம்பர் 1 இடம்!

ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ‘கிங்’ திரைப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை. அதற்குள் படத்தின் பாடல் ஒன்று ரசிகர்களின் கவனத்தை முழுமையாக ஈர்த்திருக்கிறது. படத்தில் இடம்பெற்றுள்ள ‘து மில் ஜாயே’ பாடல், ஆர்மேக்ஸ் ஹார்ட்பீட்ஸ் வெளியிட்ட வாரத்தின் சிறந்த 5 பாடல்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.

பாடல் வெளியானது முதல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக, பாடலில் இடம்பெற்றுள்ள ஹுக் ஸ்டெப் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. ஏராளமானோர் அந்த நடன அசைவுகளைப் பின்பற்றி ரீல்ஸ் வெளியிட்டு வருகின்றனர். இசை ஸ்ட்ரீமிங் தளங்களிலும் பாடல் தொடர்ந்து கவனம் பெற்று வருகிறது.

இந்தப் பாடலின் மற்றொரு சிறப்பம்சம் ஷாருக்கான் – தீபிகா படுகோன் கூட்டணி. இருவரும் திரையில் இணைந்து தோன்றும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. இவர்களது திரை கெமிஸ்ட்ரியுடன் இனிமையான இசையும் அழகான காட்சிகளும் சேர்ந்து பாடலுக்கு கூடுதல் வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளன.

ஒரு பாடல் வெளியான சில நாட்களிலேயே ரசிகர்களின் கொண்டாட்டமாக மாறியிருப்பது ‘கிங்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஷாருக்கானை மீண்டும் திரையில் காண காத்திருக்கும் ரசிகர்களுக்கு இந்தப் பாடல் கூடுதல் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘கிங்’ திரைப்படம், வரும் டிசம்பர் 24, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. படம் வெளியாவதற்கு முன்பே பாடல் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ள நிலையில், அடுத்தடுத்து வெளியாகும் படத்தின் அப்டேட்களுக்கும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Shah Rukh Khan’s ‘Tu Mil Jaaye’ Takes the No. 1 Spot on Ormax Heartbeats Chart, ‘King’ Fever Grips Fans!

Even before its theatrical release, Shah Rukh Khan’s much-awaited film ‘King’ is making waves among audiences. The film’s song ‘Tu Mil Jaaye’ has secured the top spot on Ormax Heartbeats’ Top 5 Songs of the Week, reflecting the growing popularity of the track among music lovers.

Since its release, the song has been receiving an encouraging response from fans. Its catchy hook step has become particularly popular on Instagram, with several users recreating the dance moves and sharing their own reels. The track is also gaining attention across various music streaming platforms.

One of the biggest highlights of ‘Tu Mil Jaaye’ is the on-screen pairing of Shah Rukh Khan and Deepika Padukone. Their chemistry, combined with the soulful music and visually appealing sequences, has struck a chord with audiences. The reunion of the popular duo has added to the excitement surrounding the song.

With ‘Tu Mil Jaaye’ topping the weekly music chart and continuing to trend among fans, the buzz surrounding ‘King’ is steadily growing. The response to the song has further raised expectations for the film, with audiences eagerly looking forward to watching Shah Rukh Khan back on the big screen.

Directed by Siddharth Anand, ‘King’ is scheduled to arrive in theatres on December 24, 2026. With the film already generating considerable excitement through its music, fans are eagerly awaiting more updates from the much-anticipated project.