
சமீபத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து வெளியான படம் என்றால் அது மொட்ட சிவா கேட்ட சிவா இந்த படம் இரண்டு விதமான விமர்சனம் வந்தாலும் வர்த்தக ரீதியாக பெரும் வெற்றியை தேடித்தந்த படம் என்று சொல்லலாம் இதை தொடர்ந்து இவர் நடிக்கும் படம் சிவலிங்கா இந்த படம் கன்னடத்தில் வெளியாகி மிக பெரிய வெற்றி படம் என்பது குரிப்பிடதக்கது. இந்த படத்தி புனித் ராஜ்குமார் நடித்து இருந்தார் இயக்குனர் P. வாசு தான் இந்த படத்தை இயக்கினார் .

இந்த படத்தை தமிழில் எடுக்க முடிவு எடுத்த இயக்குனர் வாசு இந்த படத்துக்கு ராகவா லாரன்ஸ் சரியாக இருக்கும் என்று இந்த படத்தை போட்டு காண்பிதுள்ளார் ராகவா லாரன்ஸ்க்கு படம் பிடித்துபோக உடனே ஆரம்பிக்கலாம் என்று படத்தை ஆரபித்தனர். இந்த படம் ஒரு திரில்லர் ஹாரர் படம் . தற்போது இந்த படம் ரிலீஸ்க்கு தயாராகிவிட்டது . இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் படத்தின் நாயகி ரித்திகா சிங் ராதாரவி இசையமைப்பாளர் தமன் நடிகை பானுப்ரியா ஒளிபதிவாளர் சர்வேஸ் முரளி நடிகர் சக்திவாசு சாய் பிரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் மூன்று பாடல்கள் மற்றும் படத்தின் ட்ரைலர் திரையிட்டனர்.

படத்தின் பாடல்கள் அனைத்தும் எப்போதும் போல படு வேகமாக ரசிக்கும் படியாக அதேபோல ஆடல் பாடல் என்று காட்சியமைப்பு ராகவா லாரன்ஸ் படத்தின் பாடல்காட்சிகள் போலவே கலர் புல் டான்ஸ் என்று மிரட்டி இருந்தார் அதோடு இசையமைப்பாளர் தமன் டச்வுடன் ரசிக்கும் படி இருந்தது படத்தின் ட்ரைலர் மிக அற்புதமாக இருந்தது ட்ரைலர் பார்க்கும்போது மீண்டும் ஒரு காஞ்சனா மற்றும் சந்திரமுகியின் கலவையாக பிரமாண்டமாக இருந்தது என்று தான் சொல்லணும்.
விழாவில் பேசிய ராகவா லாரன்ஸ் இந்த படத்துக்கு முதல் ஹீரோ நாயகி ரித்திகா சிங் அடுத்து இரண்டாவது ஹீரோ வடிவேலு மூன்றாவது ஹீரோ சக்தி வாசு அப்புறம் தான் நான் காரணம் ரித்திகா சிங் அந்த அளவுக்கு மிக பிரமாதமாக நடித்துள்ளார் அதே போல அண்ணன் வடிவேலு இதில் ஒருபக்கம் காமெடி என்றால் இன்னொரு பக்கம் குணசித்திர வேடத்தில் கலக்க இருக்கிறார். அடுத்து கிளைமாக்ஸ் காட்சியில் சக்தி வாசு எல்லோரையும் நடிப்பில் மிரட்டி இருப்பார் இவர்களை தாண்டி தான் நான் இந்த படத்தில் வருவேன் என்று சொன்னார் இந்த படம் நிச்சயம் ஒரு வெற்றி படமாக தான் அமையும் என்று உறுதியுடன் சொன்னார் ராகவா லாரன்ஸ்
