
ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமா மட்டும் இல்லை இந்திய சினிமாவில் ஒரு படத்தின் துவக்கம் ஆரம்பிக்கும் போது அந்த படத்தின் டைட்டில் கதை போஸ்டர் எல்லாமே தயார் ஆனபின் தான் படத்தின் பூஜை போட்டு படபிடிப்பு ஆரம்பிப்பார்கள். இது காலம் காலமாக நடந்து வந்த சம்பிருதாயம்.
ஆனால் இப்ப அப்படி இல்லை ஒரு படத்தின் படபிடிப்பு ஆரம்பித்து விட்டு பின்னர் படத்தின் தலைப்பை அப்புறம் முதல் பார்வை போஸ்டர் என்று தனி தனியாக விளம்பர படுத்த ஆரம்பித்து விட்டனர். இது தான் இப்ப ஒரு பேஷன் ஆக போய்விட்டது . இதனால் பல குழப்பம் ஏற்படுகிறது.
சமீபத்தில் விஜய் நடிப்பில் அட்லி இயக்கும் படம் விஜய் 61 இந்த படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டது. ஆனால் இப்ப பட குழுவினர் இதை மறுத்து உள்ளனர் இது ரசிகர்கள் வெளியிட்ட தலைப்பு தான் மூன்று முகம் ரசிகர்களாக விஜய் மூன்று வேடத்தில் நடிப்பதால் மூன்று முகம் என்று தீர்மானித்து வெளிட்ட தலைப்பு தான் அது என்று படக்குழுவினர் கூறினார்கள் .
இந்த படத்தின் தலைப்பு இன்னும் நாங்களும் இயக்குனரும் முடிவு பண்ணவில்லை இதை பற்றிய ஆலோசனை இன்னும் போய்கொண்டு தான் இருக்கிறது என்று தயாரிப்பு நிறுவனமும் சொல்லுகிறது படத்தின் டைட்டில் மற்றும் முதல் பார்வை போஸ்டர் எல்லாமே வரும் மாதம் ஏப்ரல் 1ம் தேதிதான் வெளியிட திட்டமிட்டுள்ளனர் . மூன்று முகம் விஜய் 61 படத்தின் டைட்டில் இல்லை என்கிறது படக்குழு .
