Monday, April 20
Shadow

‘பாகுபலி-2’ ரிலீஸ் பிரச்சனை! – இயக்குனர் ராஜமௌலி வேண்டுகோள்!

உலக சினிமா வியக்கும் படம் என்றால் அது பாகுபலி 2 என்று சொல்லலாம் ஏன் என்றால் அந்த அளவுக்கு சினிமா ரசிகர்களிடம் ஒரு மிக பெரிய எதிர்பார்ப்பை உண்டுபண்ணியுள்ள படம் என்று சொன்னால் அது மிகையாகது. பாகுபலி முதல் பாகம் அந்த அளவுக்கு வெற்றி மட்டும் இல்லாமல் மக்களை வியக்கவும் வைத்தது அதன் பாதிப்பு தான் இந்த இரண்டாம் பாகத்தின் எதிர்பார்ப்பு என்றும் சொல்லலாம். ஆனால் இந்த இரண்டாம் பாகத்துக்கு பல இடைஞ்சல்கள் ஏற்பட்டு தான் இருக்கு அதிலும் குறிப்பாக கன்னடத்தில் இந்த படம் வெளியாகுமா என்ற கேள்வியும் உள்ளது.

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கியுள்ள ‘பாகுபலி-2’ திரைப்படம் வருகிற 28ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகவுள்ள நிலையில், சத்யராஜ் இந்த படத்தில் நடித்திருக்கிற காரணத்தால் இந்த படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்கமாட்டோம் என்று சில கன்னட அமைப்பினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இந்நிலையில் இந்த பிரச்சனை குறித்து இயக்குனர் ராஜமௌலி ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். ராஜமௌலி கன்னடத்தில் பேசி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அந்த வீடியோ பதிவில்,

‘சத்யராஜ் மீதுள்ள கோபத்தை ‘பாகுபலி-2’ திரைப்படம் மீது காட்டுவது நியாயமற்றது. சத்யராஜின் கருத்துக்கும், ‘பாகுபலி-2’ படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் அந்த கருத்தை கூறி 9 வருடங்கள் ஆகிறது. அதற்கு பிறகு அவர் நடித்த படங்கள் கர்நாடகாவில் வெளியாகியுள்ளது. ‘பாகுபலி’ முதல் பாகம் கூட வெளியாகியுள்ளது. அப்படியிருக்க ‘பாகுபலி-2’ பட வெளியீட்டில் முட்டுக்கட்டை போடுவது எந்த விதத்தில் நியாயம்? அவர் இந்த படத்தில் ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறாரே தவிர வேறு எந்த விதத்திலும் அவர் இந்த படத்தில் தொடர்புடையவர் அல்ல! அதனால் கர்நாடக மக்கள் இந்த படம் வெளியாக ஒத்துழைப்பு தரவேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்!

Leave a Reply