Monday, April 27
Shadow

அரவிந்த்சாமிபடத்தில் நடிக்க நோ சொன்ன தெலுங்கு நடிகர்

தமிழ் சினிமா இன்று புதிய பரிமாணத்தில் சென்று கொண்டு இருக்கிறது என்று சொல்லலாம் அதாவதி இன்றய சினிமா இளைஞகர்கள் வழியில் மிக சிறப்பக செயல் படுகிறது என்று தான் சொல்லணும் அதற்க்கு முக்கிய பங்கு என்றால் இவரும் ஒருவர் அவர் துருவங்கள் 16 இயக்குனர் கார்த்திக் நரேன் இவரின் அடுத்த படைப்பு ஏல்லோராலும் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படும் படம் நரகாசுரன் இந்த படத்தில் முக்கியமான பங்கு அரவிந்த் சாமி யும் இவருடன் தெலுங்கு அதாவது சமந்தா வருங்கள கணவர் நாக சைத்தன்ய நடிக்க இருந்தார். இவர் தீடீர் என்று விள்ளகியுள்ளார்.

‘துருவங்கள் 16’ படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் கார்த்திக் நரேன். தனது அடுத்த படம் ‘நரகாசுரன்’ என்று தலைப்பிடப்பட்டு இருப்பதாகவும், இதில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரையுலகிலிருந்து ஒவ்வொரு நாயகர்கள் நடிப்பார்கள் என்று தெரிவித்திருந்தார் கார்த்திக் நரேன்.

தமிழிலிருந்து அரவிந்த்சாமி, தெலுங்கிலிருந்து நாக சைதன்யா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று இறுதி செய்யப்பட்டது. ஏற்கெனவே ஒப்புக் கொண்ட படங்களின் தேதிகளால், தற்போது நாக சைத்தன்யா ‘நரகாசுரன்’ படத்திலிருந்து விலகியுள்ளார்.

மேலும், இதில் முக்கிய கதாபாத்திரத்துக்கு ஸ்ரேயா மற்றும் இந்திரஜித் சுகுமாரன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். எதிர்மறையான கதாபாத்திரத்தில் ஸ்ரேயா நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தார்கள். ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டுள்ளார்கள்.

‘நரகாசுரன்’ படத்தை கார்த்தி நரேன் மற்றும் கவுதம் மேனன் இருவரும் இணைந்து தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தது.

Leave a Reply