Saturday, April 25
Shadow

ஒரு மாதத்தைக் கடந்தும் மந்தமில்லா வேகம் – ‘துரந்தர் பழிவாங்கல்’ உலகளவில் ₹1,783 கோடி வசூல் சாதனை!

ஒரு மாதத்தைக் கடந்தும் மந்தமில்லா வேகம் – ‘துரந்தர் பழிவாங்கல்’ உலகளவில் ₹1,783 கோடி வசூல் சாதனை!

சென்னை,

திரையுலகில் தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வரும் ஸ்பை-ஆக்‌ஷன் திரைப்படமான ‘துரந்தர் பழிவாங்கல்’, வெளியானதிலிருந்து 30 நாட்களை கடந்தும் தனது வசூல் வேகத்தை குறைக்காமல் பாக்ஸ் ஆபிஸில் அபார சாதனைகளை படைத்து வருகிறது.

ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் B62 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்து, இயக்குநர் ஆதித்யா தர் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம், ஆரம்ப வாரங்களிலேயே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதோடு, தற்போது ஐந்தாவது வார இறுதியிலும் தன்னுடைய வலுவான பிடியை தக்கவைத்துள்ளது.

முதல் வாரத்தில் தொடங்கிய அதிரடி வசூல், தொடர்ந்து வாரந்தோறும் நிலைத்திருப்பது இந்த படத்தின் பெரும் பலமாகும். குறிப்பாக, 5வது வார இறுதியிலும் திரையரங்குகளில் ரசிகர்கள் திரளாக வருகை தருவது, படத்தின் நீண்டநாள் வரவேற்பை உறுதி செய்கிறது.

வசூல் நிலவரம் (இந்தியா):

முதல் வாரம் (8 நாட்கள்) – ₹690 கோடி

இரண்டாம் வாரம் – ₹271 கோடி

மூன்றாம் வாரம் – ₹120 கோடி

நான்காம் வாரம் – ₹58 கோடி

5வது வார இறுதி வசூல்:

வெள்ளி – ₹3.00 கோடி

சனி – ₹5.00 கோடி

ஞாயிறு – ₹5.50 கோடி

மொத்தம் – ₹13.50 கோடி

இதுவரை, இந்தியாவில் நிகர வசூல் (NBOC) ₹1,153 கோடியையும், மொத்த வசூல் (GBOC) ₹1,360 கோடியையும் கடந்துள்ளது. வெளிநாட்டு சந்தைகளில் மட்டும் ₹423 கோடி வசூல் ஈட்டியுள்ள இப்படம், உலகளவில் மொத்தமாக ₹1,783 கோடியை கடந்துள்ளது.

திரையரங்குகளில் ஒரு மாதத்தைக் கடந்தும் குறையாத வரவேற்பு, இந்த படத்தை சமீப காலங்களில் வெளியான மிகப்பெரிய வர்த்தக வெற்றிப் படங்களில் ஒன்றாக மாற்றியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ள தொடர்ச்சியான வரவேற்பும், வார இறுதிகளில் நிலைத்திருக்கும் வசூலும், இப்படத்தின் நீண்ட ஓட்டத்தை மேலும் வலுப்படுத்தும் என தொழில்துறை வட்டாரங்கள் கணிக்கின்றன.

 

Unstoppable Even After a Month – ‘Dhurandhar Pazhivaangal’ Crosses ₹1,783 Crore Worldwide!

Chennai,
The spy-action entertainer ‘Dhurandhar Pazhivaangal’ continues to dominate the box office even after completing over 30 days in theatres, maintaining an exceptional run with impressive collections worldwide.

Produced by Jio Studios and B62 Studios, and directed by Aditya Dhar, the film has enjoyed a phenomenal reception since its release. What began as a record-breaking opening has now translated into sustained success, with the film holding strong even into its fifth weekend.

A key highlight of the film’s performance is its consistent box office trend week after week. The strong turnout during the fifth weekend clearly reflects the audience’s continued interest and the film’s solid word-of-mouth.

Box Office Breakdown (India):
Week 1 (8 days) – ₹690 crore
Week 2 – ₹271 crore
Week 3 – ₹120 crore
Week 4 – ₹58 crore

Fifth Weekend Collection:
Day 30 (Friday) – ₹3.00 crore
Day 31 (Saturday) – ₹5.00 crore
Day 32 (Sunday) – ₹5.50 crore
Total – ₹13.50 crore

So far, the film has collected ₹1,153 crore (Net) and ₹1,360 crore (Gross) in India. In overseas markets, it has earned ₹423 crore, taking its total worldwide gross to a massive ₹1,783 crore.

With sustained audience support even after a month in theatres, ‘Dhurandhar Pazhivaangal’ has emerged as one of the biggest commercial successes in recent times. Trade analysts predict that the film’s steady momentum and strong weekend numbers will continue to drive its impressive theatrical run in the coming weeks.