Sunday, April 19
Shadow

சத்ரியன் திரைப்படத்துக்கு வந்த சத்திய சோதனை!

2012ல் கும்கி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் விக்ரம் பிரபு. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேரன், நடிகர் பிரபு மகன் என்கிற அடையாளம் இவரை ஒரு நாயகனாக கோடம்பாக்க சினிமாவில் வலம் வர உதவியது. புதிய கதை களம், மயக்கும் பாடல்கள் கும்கி படத்தின் வசூலை தரவில்லை என்றாலும் ஃபீல்டில் கொஞ்சம் பேர் வாங்கி தந்தது. அதே சமயம் சிவாஜி பேரன் என்ற பேனரை வைத்து படத்தை முடித்து விடலாம் என்று இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் விக்ரம் பிரபு தேதிக்காக குவிய தொடங்கினார்கள்.

ஆனால். 2013ல் இவன் வேற மாதிரி, 2014 வெள்ளைகாரதுரை, அரிமா நம்பி, சிகரம் தொடு, 2015 இது என்ன மாயம் 2016 வீர சிவாஜி, வாகா என தொடர்ச்சியாக விக்ரம் பிரபு நடித்த படங்கள் ரீலீஸ் ஆனாலும் கும்கிக்கு பின் வெள்ளைகார துரை மட்டும் தான் லாபகரமான படமாகும். பிறபடங்கள் எல்லாம் பாக்ஸ் ஆபீசில் பரிதாபகரமான தோல்வியை தழுவியது.

இந்நிலையில்தான் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் “சத்திரியன்” வெளிவர உள்ளது. சுந்தரபாண்டியன், கதிர்வேலன் காதல் படங்களை இயக்கிய பிரபாகரன் இயக்கியுள்ள இப்படம் தமிழ்நாடு உரிமை 6 கோடி ரூபாய்க்கு வியாபாரமாகியுள்ளது. அதே சமயம் தனுஷ் -கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பிரபு சாலமன் இயக்கிய தொடரி படத்தை தயாரித்த சத்யஜோதி நிறுவனத்துக்கு இதன் மூலம் பெறும் நஷ்டம் ஏற்பட்டது.

மேலும் அஜீத் நடித்துள்ள ” விவேகம் ” படம் தயாரிப்பில் திட்டமிட்டதற்கு மேல் செலவு. அந்த செலவை சரிகட்டும் அளவு படம் போணியாகவில்லையாம். இதற்கிடையில் தொடர் தோல்வி நாயகன் விக்ரம் பிரபு, கதிர்வேலன் காதல் தோல்விக்கு பின் பிரபு இயக்கம் என மூன்று தரப்பினருக்கும் சத்ரியன் வெற்றி முக்கியம்.

ஆனால் சத்ரியன் விற்பனை செய்யப்படடிருக்கும் விலைக்கு தியேட்டர்களில் கல்லா கட்டுமா என்று பல தரப்பிலும் சந்தேகம் எழுப்பியதால் மூன்று தரப்பினரும் தங்கள் கைக் காசை போட்டு படம் ஆஹா.. ஓஹோ என்று சொல்ல வைத்துக் கொண்டிருக்கிறார்களாம்.

Leave a Reply