Wednesday, October 28
Shadow

பிரேக்கப் ஆனவர்களுக்கு ஒரு ஆறுதல்… காதல் நினைவுகளைச் சுமந்து வரும் பால் டப்பாவின் ‘ஏரோபிளேன்’!

பிரேக்கப் ஆனவர்களுக்கு ஒரு ஆறுதல்… காதல் நினைவுகளைச் சுமந்து வரும் பால் டப்பாவின் ‘ஏரோபிளேன்’!

காதல் தோல்விக்குப் பிறகு மீண்டும் சந்திக்கும் காதலர்கள்… இசையோடு பயணிக்கும் பழைய நினைவுகள்!

காதல் தோல்வி என்பது ஒரு உறவின் முடிவாக இருக்கலாம். ஆனால், அந்தக் காதலோடு வாழ்ந்த நினைவுகளுக்கு மட்டும் அவ்வளவு எளிதில் விடை கொடுத்துவிட முடியாது. அப்படியான உணர்வுகளை இசையோடு சொல்ல வந்திருக்கிறது ராப் இசைக் கலைஞர் பால் டப்பாவின் புதிய மியூசிக் வீடியோ ஆல்பமான ‘ஏரோபிளேன்’.

சுயாதீன இசை உலகில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வரும் பால் டப்பா, பாடகர், பாடலாசிரியர், ராப் இசைக் கலைஞர், நடிகர் எனப் பல தளங்களில் இயங்கி வருகிறார். இவரது ஒவ்வொரு இசை வெளியீடும் இணையத்தில் கவனம் ஈர்த்து வரும் நிலையில், தற்போது அவர் எழுதி, பாடி, நடித்திருக்கும் ‘ஏரோபிளேன்’ மியூசிக் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த ஆல்பத்தை திங்க் இன்டி வெளியிட்டுள்ளது.

விமானப் பயணத்தில் மீண்டும் சந்திக்கும் காதலர்கள்!

‘காதல் வேணாம்னு சொன்னா காதல் பண்ண சொன்னாயே…’ என்ற வரிகளுடன் தொடங்கும் இந்தப் பாடல், காதல் தோல்விக்குப் பிறகு மனதில் தேங்கியிருக்கும் உணர்வுகளைப் பேசுகிறது. விமானப் பயணத்தின் பின்னணியில் அமைந்துள்ள இந்த மியூசிக் வீடியோவில், பிரிந்துபோன காதலர்கள் மீண்டும் சந்திக்கிறார்கள். அந்தச் சந்திப்பு அவர்களுக்குள் மறைந்திருந்த பழைய நினைவுகளையும், சொல்லாமல் விட்ட உணர்வுகளையும் மீண்டும் உயிர்ப்பிக்கிறது.

இந்தக் கதைக்களத்தில் பால் டப்பாவுடன் நடிகை அனன்யா ராம் பிரசாத் இணைந்து நடித்துள்ளார். இருவருக்கும் இடையிலான இயல்பான நடிப்பும், திரையில் வெளிப்படும் கெமிஸ்ட்ரியும் பாடலின் உணர்வுகளுக்கு வலுசேர்க்கின்றன. இந்த மியூசிக் வீடியோவை ராகுல் அசோக் குமார் இயக்கியுள்ளார். அடியேல் மஸார் இசையமைக்க, பிரகதீஷ் பிரபு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சிங்கிள் பாய்ஸின் மனசைப் பேசும் பாடல்!

காதல் தோல்விப் பாடல்கள் பல வந்திருந்தாலும், பிரேக்கப்பிற்குப் பிறகு முன்னாள் காதலர்கள் மீண்டும் நேருக்கு நேர் சந்தித்தால் மனதில் என்னென்ன உணர்வுகள் எழும் என்பதை மையமாகக் கொண்டிருப்பது ‘ஏரோபிளேன்’ பாடலின் தனிச்சிறப்பு.

பால் டப்பாவின் வரிகளில் வெளிப்படும் ஏக்கம், பழைய நினைவுகள், பிரிவின் வலி என அனைத்தும் காதல் தோல்வியைச் சந்தித்தவர்களுடன் எளிதில் தொடர்புபடுத்திக் கொள்ளும் வகையில் அமைந்துள்ளன. காதலை மறக்க நினைத்தாலும், அதன் நினைவுகளிலிருந்து வெளியே வர முடியாமல் தவிக்கும் பலருக்கும் இந்தப் பாடல் தங்களுடைய கதையைப் போலவே தோன்றுகிறது.

இதனாலேயே இளைஞர்கள் மத்தியில் இந்தப் பாடல் கவனம் பெற்று வருகிறது. குறிப்பாக, காதல் தோல்வியைக் கடந்து செல்ல முயற்சிப்பவர்களுக்கு மனதுக்கு ஆறுதல் தரும் பாடலாகவும், சிங்கிள் பாய்ஸின் உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடலாகவும் ‘ஏரோபிளேன்’ கொண்டாடப்படுகிறது.

காதல் தோல்வியை வெறும் சோகமாக மட்டும் சொல்லாமல், அதற்குப் பின்னால் இருக்கும் நினைவுகளையும் உணர்வுகளையும் இசையில் கடத்தும் முயற்சியாக வெளியாகியிருக்கும் பால் டப்பாவின் ‘ஏரோபிளேன்’, இளம் ரசிகர்களின் பிளேலிஸ்ட்டில் இடம்பிடிக்கத் தயாராகி வருகிறது.

‘ஏரோபிளேன்’ மியூசிக் வீடியோவை இங்கே பார்க்கலாம்:

 

Paal Dabba’s ‘Aeroplane’ Takes Heartbreak on an Emotional Musical Journey

A chance reunion between former lovers, lingering memories and the pain of separation come together in Paal Dabba’s latest music video, released by Think Indie.

Love may come to an end, but the memories associated with it are not always easy to leave behind. Exploring these lingering emotions through music, rapper, singer, lyricist and actor Paal Dabba has released his latest music video album, ‘Aeroplane’, which captures the feelings that remain after a breakup.

Known for his distinctive style and growing popularity in the independent music scene, Paal Dabba has been making waves with his music releases across digital platforms. With ‘Aeroplane’, he takes on multiple roles as the lyricist, singer and lead actor. The music video has been released by Think Indie.

Former lovers reunite on an aeroplane journey

Beginning with the lines “Kaadhal Venamnu Sonna Kaadhal Panna Sonnaaye…”, the song explores the emotions that surface when former lovers meet again after a breakup.

Set against the backdrop of an aeroplane journey, the music video follows two people whose unexpected reunion brings back memories of their relationship. As the journey unfolds, their shared past and unspoken emotions resurface, taking viewers through a nostalgic and emotionally charged experience.

Paal Dabba shares screen space with actress Ananya Ram Prasad, whose chemistry with the singer-actor adds to the emotional appeal of the video. Their performances blend seamlessly with the music and storytelling, bringing the song’s central theme to life.

The music video is directed by Rahul Ashok Kumar, with music composed by Adiel Massar and cinematography by Pragadeesh Prabhu.

A heartbreak anthem for the young generation

While love-failure songs are not new to the music scene, ‘Aeroplane’ stands out by focusing on the emotions surrounding a reunion after a breakup. Rather than dwelling solely on the pain of separation, the song explores the memories, longing and unresolved feelings that continue to linger long after a relationship ends.

Paal Dabba’s lyrics strike a chord with listeners who have experienced heartbreak, offering a relatable portrayal of the struggle to move on while holding on to memories of the past.

The song is finding a connection with young audiences, particularly those navigating the emotional aftermath of failed relationships. Its heartfelt lyrics and nostalgic mood have made it relatable to single boys and listeners looking for music that reflects their own experiences.

With its blend of emotional storytelling, memorable music and the on-screen chemistry between Paal Dabba and Ananya Ram Prasad, ‘Aeroplane’ is emerging as a relatable musical companion for those dealing with heartbreak.

Watch Paal Dabba’s ‘Aeroplane’ music video here: