
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது. ஆனால், இன்னும் படத்துக்குத் தலைப்பு வைக்கவில்லை. படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் ஜூன் 22ம் தேதி விஜய் பிறந்தநாள் ஆண்டு வெளியிடுகிறார்கள் .
விஜய் மூன்று வேடங்களில் நடித்துவரும் இந்தப் படத்தில், நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் என மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர். அதுமட்டுமல்ல, வடிவேலு, சத்யன், யோகிபாபு என மூன்று காமெடியன்களும் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில், வில்லனாக நடித்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா. அவரிடம் படம் குறித்துக் கேட்டபோது, “படம் செமையா வந்துருக்கு. 3 கேரக்டர்களில் விஜய் சார் பெர்ஃபாமன்ஸ், டான்ஸ், காமெடி என எல்லாம் கலந்த ஃபுல் மீல்ஸாக இந்தப் படம் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
