Monday, April 20
Shadow

தயாரிப்பாளரை தவிக்கவிட்டு ஓடிய அறிமுக இயக்குனர்

தமிழ் சினிமா தயாரிப்பு, வியாபாரம், வசூல் இவற்றில் நஷ்ட கணக்கு தொடர்ந்தாலும் அது தெரியாமலே கதை சொல்லும் இயக்குனர்களின் மீது நம்பிக்கை கொண்டு புதிய தயாரிப்பாளர்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.

கோவை அவினாசியில் கோடிகளை குவிக்கும் கட்டுமான தொழில் அதிபர் விஜிக்கு சினிமா மீது அதீத காதல். அதிலும் ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்பதில் அளவற்ற மோகமும் ஆசையும் கொண்டிருந்த விஜியிடம் உதவி இயக்குனர் விக்கி ஆனந்த் கூறிய கதை தான் “உரு “வாக உலகமெங்கும் ரீலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, புரமோஷன் நிகழ்வுகளில் படத்தின் இயக்குனர் பங்கேற்கவில்லை. என்ன காரணம் என தயாரிப்பு தரப்பில் விசாரித்த போது கிடைத்த தகவல்கள் அதிர்ச்சிகரமானவை. தன்னை இயக்குனராக அறிமுகப்படுத்த கோடிகளை கொட்டி ” உரு ” படத்தை தயாரிக்க முன் வந்த விஜியை அறிமுக இயக்குனர் விக்கி ஆனந்த் தலைமையில் கோடம்பாக்கத்து சினிமா தொழில் நுட்ப கலைஞர்கள் உலுக்கி எடுத்த கதையை கூறினார் நிர்வாக தயாரிப்பாளர் ஆனந்த கிருஷ்ணன். 1.67 கோடி பட்ஜெட், 25 நாட்கள் படப்பிடிப்பு 60 நாட்களில் முதல் பிரதி தயாராகி விடும், என்று இயக்குனர் கூறியதை நம்பி படம் எடுக்க தயாரானார் சினிமா தயாரிப்பு, வியாபார அனுபவம் இல்லாத விஜி.படப்பிடிப்பு தொடங்கும் வரை பூனை போல் பம்மி இருந்த விக்கி ஆனந்த் ம், அவரது குழுவும் அதன்பின் வழக்கம் போல இன்னொரு முகத்தை காட்டி காப்பி தயாராகும் வரை மும்மடங்கு பட்ஜெட்டை எகிற செய்து எஸ்கேப் ஆன இயக்குனர் இன்று வரை தயாரிப்பாளருக்கு எந்த வகையிலும் ஒத்துழைப்பு கொடுக்கவில்லையாம் கலையரசன், தன்ஷிகா, மைம் கோபி இவர்கள் மட்டுமே முகம் தெரிந்த நடிகர்கள். 25 நாட்களில் 35 கால்ஷீட்டில் படத்தை எடுத்து முடித்து விடுவேன் என கூறிய இயக்குனர் 67 கால்ஷீட்டில் படத்தை முடித்து கொடுத்துள்ளார். படத்தில் மொத்த கதா பத்திரமே 10க்கும் குறைவு படப்பிடிப்புக்கு இவர் பயன்படுத்திய தொழிலாளர்கள் எண்ணிக்கை 130 .67 கால்ஷீட்டில் 21 கால்ஷீட்டை டபுள் பேட்டா கொடுக்கிற சூழலை இயக்குனரும், தயாரிப்பு நிர்வாகியும் உருவாக்கி பட்ஜெட்டை 3.13 கோடியாக எகிற வைத்துள்ளனர். என்ன ஆனாலும் படத்தை முடித்து விடுவது என்ற நிலையில் பண மதிப்பு நீக்க அறிவிப்பு நடைமுறைக்கு வந்த நிலையில் படத்தை எடுத்து முடித்து சென்னை வந்த தயாரிப்பாளருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. படத்தின் போஸ்டு புரொடக்க்ஷன்வேலைகள் தொடங்க இயக்குனர் வரவில்லை. ஐல்லி கட்டு போராட்டத்தில் இருக்குறேன் அது முடிவுக்கு வந்த பின் தான் பட வேலைகளை தொடங்குவேன் என இயக்குனர் கூறியுள்ளார். பெரும் முதலீடை போட்ட தயாரிப்பாளர் பொறுமை காத்தார். இயக்குனர் போஸ்ட் புரொடக்க்ஷன் வேலைகளை தொடங்கிய போது, பேட்ச் ஒர்க் வராது என கூறியிருந்த இயக்குனர் 5 நாட்கள் மீண்டும் கொடைக்கானலில் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என அதிர்ச்சியை கொடுத்துள்ளார். இது போன்ற வேலைகளுக்கு 10 பேர் போனால் போதும் என்ற நிலையில் 65 பேர் கொண்ட யூனிட்டை கொடைக்கானல் அழைத்து சென்று பேட்ச் ஒர்க் வேலைகளை செய்துதிரும்பிய இயக்குனர், டிசம்பரில் கிளைமேக்ஸ்சை சென்னையில் எடுத்து முடித்தார். ஆனால்படத்தை ஏப்ரல் இறுதி வரை முடித்து கொடுக்கவில்லை. நீண்ட போராட்டத் துக்கு பின் மே மாதம் ரீலீஸ் என்றுவிளம்பரம் கொடுத்த பின் படத்தை முடித்து கொடுத்து விட்டு போன இயக்குனர் படத்தை ரீலீஸ் செய்ய, புரமோஷன் பணிகளுக்கு அழைத்த போது வரவில்லை. தனி மனிதனாக போராடி தமிழகமெங்கும் நேரடி வெளியிடாக உரு படத்தை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் விஜி என கூறிய கார்த்திக் ஆனந்தகிருஷ்ணன்எழுப்பிய கேள்விகள் புதுமுக இயக்குனர்களை அறிமுகப்படுத்த முயற்சிக்கும் புதிய தயாரிப்பாளர் பாளர்ளுக்கு ஒரு பாடம். வாய்ப்பு கேட்டு வரும் போது பதுங்கி வரும் இயக்குனர்கள் படப்பிடிப்பு தொடங்கியவுடன் தயாரிப்பாளரை வேலைக்காரனாக மாற்றி விடுகின்றனர். குறைந்த பட்ஜெட்டில் படம் முடித்து விடலாம் என நம்ப வைத்து செலவை அதிகப்படுத்தி விடுகின்றனர். இயக்குனர் என்கிற முகவரி கிடைத்தவுடன் அதற்கு காரணமாக வர்களை அம்போ என விட்டு அடுத்த பட வாய்ப்புகளை தேடி போய் விடுகின்றனர். இவைகளை கவனத்தில் கொண்டு புதியவர்களுக்கு வாய்ப்பு தாருங்கள் என்கிறார் விஜி. அடுத்து என்ன திட்டம் என நிர்வாக தயாரிப்பாளர் கார்த்திக்கிடம் வினவியபோது

எங்களை நம்ப வைத்து பட்ஜெட்டை எகிற வைத்து ஏமாற்றியஇயக்குனர் விக்கி ஆனந்த்,மீதுநடவடிக்கை கோரி புகார் கொடுக்க உள்ளேன், ஏனென்றால் தயாரிப்பு நிர்வாகி திட்டமிட்டபட்ஜெட்டை விட அதிகரிக்க காரணம் இயக்குனர் விக்கி ஆனந்த்தான் காரணம். அவரது அனுபவமின்மை, எங்களை எந்தந்த விஷயங்களில் யார் யார்ஏமாற்றி னார்கள் என்பதை ஆதாரங்களுடன் சம்பந்தபட்ட யூனியனில் புகார் கொடுக்க திட்டமிட்டுட் ள்ளோம்.எங்களைபோன்று இனி வருபவர்கள் ஏமாற கூடாது என்ற நல்லெண்ணமே இதற்கு காரணம் என்கிறார் கார்த்திக் ஆனந்தகிருஷ்ணன்.

Leave a Reply