Friday, April 17
Shadow

நடிகர் தனுஷ் செய்த அரும்பணி!! கோடம்பாக்கமே கதிகலங்கி உள்ளது!!

நடிகர் தனுஷ் தனது சிறுவயதில் பெரும் கஷ்டமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் தனது அப்பா ஒரு சினிமா இய்ககுனாரக இருந்த போதும் பணத்திற்கு ரொம்ப பஞ்சம் தான் இந்தநிலையிலே அவர் விரும்பம் இல்லாமல் நடிக்க வந்து இன்று மிக பெரிய இடத்தை பிடித்துள்ளார்

அவர் வந்த பாதையை மறவாமல் இன்று கஷ்ட படும் பலருக்கு சத்தமே இல்லாமல் உதவி செய்து வருகிறார்
திருடா திருடி படத்தின் இயக்குனர் சுப்ரமணிய சிவா என்னும் நல்ல மனிதர் சுப்ரமணிய சிவா அண்ணனிடம் ஃபோனில் மட்டும்தான் பேசியிருந்தேன். அவரும் தஞ்சையில் ஒரு விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதால் கொலை விளையும் நிலம் ஆவணப்பட அறிமுக விழாவுக்கு அழைத்தேன்.

தான் பணிபுரிந்த விஐபி2 படத்தின் பிரஸ் மீட்டை கூட விட்டுவிட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டதோடு கடைசி வரை இருந்தார். இதைக் கேள்விப்பட்ட நடிகர் தனுஷ் படத்தை பற்றி விசாரித்திருக்கிறார். படத்தை அவரிடம் கொண்டு சென்றதோடு விவசாயிகளின் துயரத்தையும் எடுத்து சொல்லியிருக்கிறார் சுப்ரமணிய சிவா. விவசாயிகளின் வேதனையை கண்டு நாம் ஏதாவது பண்ணனும் சிவா சார், என்ற தனுஷின் வார்த்தைகளை கேட்டதும் அதற்கான முயற்சிகளில் இறங்கிவிட்டார்.

இதோ இன்று தனுஷ், பலியான விவசாய குடும்பங்களில் 125 குடும்பங்களை நேரில் அழைத்து வந்து அவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் தரவிருக்கிறார். தான் போட்டியிட்ட தேர்தல் வேலைகளை கூட பார்க்காமல் ஒரு வார காலமாக இந்த நிகழ்வை ஒருங்கிணைக்கும் பணியைத் தான் செய்தார் அண்ணன் சிவா.

என்னால் ஓரளவுக்கு தான் அந்த குடும்பங்கள் பற்றிய தகவல்களை திரட்டித் தர முடிந்தது. தனுஷ் ரசிகர் மன்றத்தினர் பேருதவியாக இருந்துள்ளனர். சிவா அண்ணனின் தீவிர உழைப்பு தான் இன்றைய நிகழ்வுக்கு காரணம். சுமார் 80 லட்ச ரூபாயை ஒரு நடிகர் ஒரே நேரத்தில் சத்தமே இல்லாமல் உதவ வைப்பது பெரிய விஷயம். பெரிய மனதோடு இதை செய்ய முன் வந்த தனுஷ் க்கு பல குடும்பங்கள் நன்றி சொல்கின்றனர்.

இதை வழிகாட்டிய சிவா அண்ணனுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் !

Leave a Reply