Saturday, April 18
Shadow

தன் ரசிகர்களின் குஷிபடுத்த “மெர்சல்” படத்தில் ஓபனிங் காட்சியில் அவர் எடுத்த ரிஸ்க்

விஜய் அஜித் இன்று தமிழ் சினிமாவின் முன்னனி ஹீரோ அடுத்த சூப்பர் ஸ்டார் என்று நாம் சொல்லுகிறோம் அதற்கு அவர்கள் எவ்வளவு சிரமங்களை கடந்து தான் இந்த நிலைமைக்கு வந்துள்ளனர். ஏன் உயிரை பணயம் வைத்து தான் சண்டைகாட்சிகளில் நடித்துள்ளனர். இதன் மூலம் தான் இன்று தமிழ் சினிமாவில் உச்ச நடிகர் அந்தஸ்தை பெற்றுள்ளனர்.

வரும் வெள்ளிகிழமை வெளியாக இருக்கும் விவேகம் படத்தில் அஜித் தன் முழு திறமை மட்டும் இல்லாமல் உழைப்பையும் செலுத்தியுள்ள படம் என்று சொன்னால் அது விவேகம் என்று சொல்லலாம் அந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்துள்ளார்.

அதே போல தான் நம்ம விஜய்யும் ரிஸ்க் என்றால் அவருக்கு ரஸ்க் என்று சொல்லலாம் அந்த அளவுக்கு ரிஸ்க் சண்டை மட்டும் நடனத்திலும் எடுக்கும் ஒரு நடிகர் என்று சொல்லலாம் இவை எல்லாம் தன் ரசிகர்களை குஷி படுத்த மட்டுமே

விஜய் மற்றும் அட்லி கூட்டணியில் உருவாகி வரும் படம் மெர்சல் இந்த படத்தில் வரும் ஓபனிங் காட்சிக்காக விஜய் பயங்கர ரிஸ்க் எடுத்துள்ளாராம் மேஜிக் நிபுணராக வரும் விஜய் முதல் காட்சியில் மெர்சல்’ படத்தின் ஓப்பனிங் காட்சியும் அப்படிப்பட்டதுதான்! படத்தில் விஜய் ஒரு மேஜிக்மேன்! ஒரு பெரிய தியேட்டரில் புலி ஒன்று நுழைந்துவிட, அங்கிருக்கும் விஜய் அதை அடக்குவது போலக் காட்சி. மேஜிஷியன் என்பதால், அந்தப்புலியை அவரே வரவழைத்தார். அவரே அடக்கினார் என்பது போல போகுமாம் காட்சி. ஆனால் வழக்கமாக இதுபோன்ற சீனுக்கு, கிராபிக்ஸ் புலியைதான் பயன்படுத்தி வந்தது சினிமா. அடிமைப்பெண் எம்ஜிஆர் போல, “இந்தப்படத்தில் ஒரிஜனல் புலியே இருக்கட்டும். மோதிப் பார்த்துடலாம்” என்றாராம் விஜய்.

இந்த காட்சியை படம் பிடிக்க வெளிநாட்டுக்குப் போய்விட்டார்கள். அங்கு பழக்கப் படுத்தப்பட்ட ஒரு ஒரிஜனல் புலியுடன் கட்டி உருண்டு நடித்திருக்கிறார் விஜய். என்னதான் பழக்கப்பட்ட புலியாக இருந்தாலும், டேஸ்ட் நல்லாயிருக்கே என்று ஒரு கணம் நினைத்திருந்தால்?

n

நன்றி – அந்தணன்

Leave a Reply