Sunday, April 19
Shadow

மெர்சல் படத்தில் விஜய்க்கு எத்தனை வேடங்கள் குழப்பத்தை ஏற்படுத்தும் அட்லி

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸின் 100-வது படைப்பாக பிரமாண்டமாக உருவாகி வருகிறது ‘மெர்சல்’ படம். ‘தெறி’ ஹிட் கூட்டணி என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும் சமீபத்தில் வெளியான மெர்சல் பாடல்களுக்கு பெரிய வரவேற்பு கிடைத்திருப்பதுடன், தென்னிந்திய சினிமாவிலேயே எந்த படத்திற்கும் கிடைக்காத ஒரு அங்கீகாரம் மெர்சல் படத்திற்கு கிடைத்துள்ளது. அதாவது டுவிட்டரில் மெர்சல் படத்திற்கான எமோஜி ஒன்று வெளியிடப்பட்டது. அதோடு இப்படத்திற்கு வர்த்த குறியையும் (TradeMark) தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது.

இது ஒருபுறமிருக்க ‘மெர்சல்’ படத்தில் விஜய் எத்தனை வேடங்களில் நடிக்கிறார்? இரண்டா? அல்லது மூன்றா? என்ற கேள்வியும் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. காரணம், ஆரம்பத்தில் விஜய்க்கு மூன்று கேரக்டர்கள் என்ற சொல்லப்பட்டது. ஆனால், இப்போதுவரை விஜய்யின் இரண்டு தோற்றங்கள் (மெஜீஷியன், கிராமத்து வேடம்) மட்டுமே புகைப்படங்களிலும், லிரிக் வீடியோவிலும் இடம்பெற்று வருகிறது.

அதோடு, ஆடியோ விழாவின்போது படத்தில் வில்லனாக நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா, “படத்தில் மூன்று தளபதி இருக்கிறார்கள்!” என்றார். ஆனால், பேட்டி ஒன்றில் விஜய் குறிப்பிடும்போது, “இரட்டை வேடங்களில் நடிப்பதால் படத்தின் வேலைகள் இழுத்துக் கொண்டே செல்கின்றன!” என்று கூறினார். இதனால் மெர்சல் படத்தில் விஜய்க்கு எத்தனை வேடம் என்பது புரியாத புதிராக உள்ளது.

இதுகுறித்து இயக்குநர் அட்லி எந்த தகவலையும் இதுவரைக்கும் வெளியிடவில்லை என்பதால் ரசிகர்களுக்கு ஏதோ சஸ்பென்ஸ் மெர்சலில் காத்திருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது.

Leave a Reply