
இந்தியாவின் பெருமை என்று சொல்லப்படும் ஏ.ஆர் ரகுமான் சர்வதேச சவுண்ட் டிராக் விருதுக்கு ஏ.ஆர். ரஹ்மான் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார். சர்வதேச அளவில் இசை, பாடல் சார்ந்த கலைஞர்களுக்கு பின்னணி இசை, பாடல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், 17 வது சவுண்ட் டிராக் விருது விழாவில் மக்களுக்கு பிடித்தவர் பிரிவில் ஏ.ஆர்.ரஹ்மான் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார்.
விக்டரி ஹவுஸ் திரைப்படத்திற்கு இசையமைத்ததற்காக இந்தப் பட்டியலில் அவர் பெயர் இடம் பிடித்திருக்கிறது. சவுண்ட் டிராக் விருது விழா வரும் 17, 18-ம் தேதிகளில் பெல்ஜியத்தில் நடைபெறுகிறது. நிச்சயம் இந்த விருது ஏ.ஆர்.ரகுமானுக்கு கிடைக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கபடுகிறது
