
அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்குள் எப்பொதுஎ கடுமையான போட்டி இருக்கும் யார் சிறந்தவர்கள் என்று ஆனால் இப்போது நிலைமை வேறு மாதிரி ஆகிவிட்டது யார் படம் அதிக வியாபாரம் என்ற போட்டி தயாரிப்பாளர்கள் போடா ஆரம்பித்துள்ளனர் என்று தான் டோல்லனும் காரணம் விவேகம் படத்தை விட மெர்சல் வியாபாரம் எப்படி என்று ஒரு போட்டி நடக்குது இப்ப .
அஜித்தின் விவேகம் படம் எப்படி ஒரு பிரம்மாண்ட வரவேற்பில் வெளியாகி இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அஜித் நடித்த எந்த படத்திற்கும் இல்லாத அளவிற்கு இந்த படம் மெகா பட்ஜெட்டில் தயாரானதோடு பெரிய தொகைக்கும் வியாபாரம் ஆகியிருந்தது.
இந்த நிலையில் அஜித்தின் விவேகம் பட வியாபாரத்தை விட விஜய்யின் மெர்சல் படம் 30% அதிக வியாபாரம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
மெர்சல் படத்தின் பட்ஜெட்டே 135 கோடி என்கிறார்கள். முழுக்க முழுக்க பல்கேரியாவிலேயே எடுக்கப்பட்ட விவேகம் படமே 110 கோடி பட்ஜெட் தான். ஆனால், ராஜஸ்தான், சென்னை மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் மட்டுமே 95% படப்பிடிப்பை செய்துள்ள நிலையில் மெர்சல் படம் 135 கோடி பட்ஜெட்டை தொட்டுள்ளது.
இன்னும் சில தினங்களில் விஜய்யின் மெர்சல் பட டீஸர் வெளியாக இருக்கும் சந்தோஷத்தில் ரசிகர்கள் உள்ளனர்.
