Tuesday, October 27
Shadow

‘லவ் இங்க்’ படத்தில் வில்லனாக சுனில் ரெட்டி – இறுதிக்கட்டத்தை எட்டிய படப்பிடிப்பு!

‘லவ் இங்க்’ படத்தில் வில்லனாக சுனில் ரெட்டி – இறுதிக்கட்டத்தை எட்டிய படப்பிடிப்பு!

ராஜ் அய்யப்பா – டெல்னா டேவிஸ் நடிக்கும் இளமை ததும்பும் காதல் நகைச்சுவைப் படம் டிசம்பரில் திரைக்கு வருகிறது!

இன்றைய இளைஞர்களின் காதல், உறவுகள், உணர்வுகள் என சமகால வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகி வரும் திரைப்படம் ‘லவ் இங்க்’. எம்.ஆர். பிக்சர்ஸ் தயாரிப்பில், மேகராஜ் தாஸ் இயக்கும் இப்படத்தில் ராஜ் அய்யப்பா, டெல்னா டேவிஸ் இணைந்து நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நடிகர் சுனில் ரெட்டி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க படக்குழுவுடன் இணைந்துள்ளார்.

காதல், நகைச்சுவை, எதிர்பாராத திருப்பங்கள் என இளைஞர்களைக் கவரும் அம்சங்களுடன் தயாராகும் ‘லவ் இங்க்’, இன்றைய தலைமுறையின் உறவுச் சிக்கல்களையும் காதல் அனுபவங்களையும் ரசிக்கத்தக்க வகையில் சொல்லவிருக்கிறது. அதே நேரத்தில், குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கக்கூடிய பொழுதுபோக்குத் திரைப்படமாகவும் இதனை உருவாக்கி வருவதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதிகளிலும் நடைபெற்றது. தற்போது மீண்டும் சென்னையில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு நிறைவடைந்ததும், அடுத்தகட்டமாகப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெறவுள்ளன. திட்டமிட்டபடி வரும் டிசம்பர் மாதம் படத்தைத் திரையரங்குகளில் வெளியிடும் நோக்கில் படக்குழு பணியாற்றி வருகிறது.

இப்படத்தில் சுனில் ரெட்டி மட்டுமின்றி ஆர்த்தி, ரவி மரியா, மைம் கோபி, பட்டிமன்றம் ராஜா, ரமா, சுபாஷினி, வினோத் முன்னா, கேபிஒய் வினோத், மௌரிஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படம் குறித்துப் பேசிய இயக்குநர் மேகராஜ் தாஸ், “இன்றைய ஜென்ஸீ தலைமுறையினருக்குப் பிடித்தமான படமாக ‘லவ் இங்க்’ இருக்கும் என்று நம்புகிறேன். இப்படத்தில் பணியாற்றிய அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டுள்ளனர். இளைஞர்களை மட்டுமின்றி, குடும்பத்தினரும் ஒன்றாக அமர்ந்து ரசித்துக் கொண்டாடும் படமாக இது அமையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றார்.

மேகராஜ் தாஸ் எழுதி இயக்கும் இப்படத்தை, மகேந்திரன் வழங்க எம்.ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தரண் குமார் இசையமைக்கிறார். ஐ. மருதநாயகம் ஒளிப்பதிவைக் கவனிக்க, ராமு தங்கராஜ் கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார். புவன் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார்.

இறுதிக்கட்டப் பணிகளில் வேகம் எடுத்துள்ள ‘லவ் இங்க்’, வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Sunil Reddy to Play the Antagonist in Raj Ayyappa and Delna Davis’ ‘Love Ink’; Film Enters Final Shooting Schedule

The romantic comedy, directed by Megaraj Das, is gearing up for a theatrical release in December.

‘Love Ink’, an upcoming youthful romantic comedy produced by M.R. Pictures, is progressing towards completion. Presented by A. Mahendran and directed by Megaraj Das, the film stars Raj Ayyappa and Delna Davis in the lead roles. As the shoot enters its final schedule, actor Sunil Reddy has joined the team in Chennai to portray the antagonist.

Centred on the love, emotions and relationships of today’s younger generation, ‘Love Ink’ promises an entertaining blend of romance, comedy and unexpected twists. The film aims to portray contemporary relationships in a relatable and engaging manner, while offering an enjoyable cinematic experience for audiences across age groups.

The shooting began in Chennai and subsequently continued in Cheyyar, in the Tiruvannamalai district. The team has now returned to Chennai for the final schedule. Post-production work is also set to progress at full pace following the completion of filming. The makers are working towards bringing the film to theatres in December as planned.

Apart from Raj Ayyappa, Delna Davis and Sunil Reddy, the film features Aarthi, Ravi Maria, Mime Gopi, Pattimandram Raja, Rama, Subhashini, Vinoth Munna, KPY Vinoth and Mourish in important roles.

Speaking about the film, director Megaraj Das said, “I believe ‘Love Ink’ will be a film that resonates with today’s Gen Z audience. Everyone who has worked on this project has contributed with great dedication. I am confident that the film will not only appeal to youngsters but also offer an entertaining experience that families can sit together and enjoy.”

Written and directed by Megaraj Das, ‘Love Ink’ is presented by Mahendran and produced by M.R. Pictures. Dharan Kumar has composed the music, while I. Marudhanayagam handles the cinematography. Ramu Thangaraj serves as the art director, and Bhuvan is in charge of editing.

With the final stages of production underway, ‘Love Ink’ is scheduled for a theatrical release in December.