
தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பேர் எடுக்கமுடியாத ஓவியா சமீபத்தில் பிக் நிகழ்ச்சியின் மூலம் உலக தமிழர்களிடம் இக பெரிய பேர் மற்றும் எடுத்தாங்க அதன் விளைவு இன்று ஓவியா தமிழ் சினிமாவில் ஒரு தனி இடம் பிடித்துள்ளார் வாய்ப்புப்கள் வந்து குவிகின்றது அதுவும் முன்னணி நடிகர்களுடன் ஆம்.
ராகவா லாரன்ஸ் இயக்குநராக அவதாரம் எடுத்து தமிழில் அவர் இயக்கிய முதல் படமான ‘முனி’ ஹிட் அடித்தது. வழக்கமான பேய்ப் படங்களில் இருக்கும் ஃபார்முலாவை மாற்றி, காமெடியோடு சேர்த்து இப்படத்தில் கொடுத்திருப்பார். இந்தப் படம் கொடுத்த வெற்றி ராகவா லாரன்ஸை காஞ்சனா, காஞ்சனா 2 என வரிசையாக படங்களை இயக்க வைத்தது. இந்த மூன்று படங்களும் ரசிகர்களுக்கு பிடித்துப்போக, எப்போது ‘காஞ்சனா- 3’ வரும் என ஆர்வமாக இருந்தனர் அவரது ரசிகர்கள்.
இந்நிலையில், கடந்த மாதம் ராகவா லாரன்ஸ், ‘காஞ்சனா- 3 படத்தை நானே தயாரித்து இயக்கப் போகிறேன். விரைவில் யாரெல்லாம் இந்தப் படத்தில் பணிபுரிவர் என்ற தகவலை வெளியிடுவேன்’ என்று கூறியிருந்தார். இந்நிலையில், ஓவியா, காஞ்சனா மூன்றாம் பாகம் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
