
பிக் பாஸ் வீடு என்றாலே பிரச்சனைக்கு ஒரு வீடாக ஆகிவிட்டது என்று தான் சொல்லணும் காரணம் ஒரு பக்கம் யார் உண்மையான வெற்றி என்று ஒரு குடுமிபிடி சண்டை இருக்கு ஒரு பக்கம் சினேகன் ரசிகர்கள் அவர் தான் வெற்றியாளர் என்று சொல்லி கொண்டுவருகிறார் இன்னொரு பக்கம் இவரும் மறைமுகமாக என் ரசிகர்கள் எனக்காக இப்படி செய்து கொள்வது பெருமையாக இருக்கு என்று உசுப்பிவிட்டு இருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் கவிஞர் சினேகன் பற்றி அடுத்த ஒரு பிரச்சனை கிளம்பியுள்ளது அது என்ன தெரியுமா எல்லாம் இவரின் கட்டிபிடி வைத்தியமும் அதன் பலனும் தான் பலன் எப்படி என்று பாக்கலாம்

பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்துக் கொண்டிருந்த போதே, சினேகனை கட்டிபிடி வைத்தியர், தடவிப் பார்ப்பவர், என்று பல பட்டங்கள் கொடுக்கப்பட்டது. அந்த அளவுக்கு மனுஷனின் சில்மிஷம் பலமாகவே இருந்தது. விஜய் டிவி எடிட்டிங் செய்த வீடியோவிலேயே இப்படி என்றால், எடிட்டிங் செய்யா வீடியோவில் என்ன என்ன செய்திருப்பாரோ, என்று ரசிகர்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்தனர்.
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண் போட்டியாளர்களிடம் பேட்டி எடுக்கும் ஊடகத்தினர், சக போட்டியாளர்கள் குறித்து கேற்கும் போது, அனைவரையும் நல்லபடியாக சொல்பவர்கள், சினேகனை பற்றி கேட்டால் மட்டும், “ஐய்யயோ அவரா…” என்று அலறுகிறார்களாம்.
காயத்ரி, சுஜா, ரைசா என்று அனைத்து பெண் போட்டியாளர்களும் சினேகன் என்றாலே, ஏதோ பாகற்காயை பச்சையாய் சாப்பிட்ட ஒரு எபெக்ட்டில் முகத்தை வைத்துக்கொண்டு, தலையில் கை வைத்துக் கொள்கிறார்களாம்.
