Saturday, April 18
Shadow

மெர்சல் – திரைவிமர்சனம் ( தெரிக்கவிடும் ) Rank 4/5

மெர்சல் உலக தமிழ்ர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தாரா அட்லி, என்றால் நிச்சயம், என்று தான் சொல்லணும். படம் ஆரம்பம் முதல் இறுதிவரைக்கும் விஜய்யின் ராஜ்ஜியம் மட்டும் தான் என்று சொல்லணும். விஜய்க்கு அட்லி கிடைத்த மாபெரும் கலை சொத்து என்று கூறலாம்

ஒவ்வொரு காட்சியும் விஜய்க்கு அமைத்தது போலவே இருந்தது ஒரு விதத்தில் விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் மூன்று விஜய்யும் மூன்று விதம் என்று தான் சொல்லணும் அப்பா வெற்றிமாறன் அவரின் மகன்களாக வெற்றி – மாறன் என்ற இருமகன்கள். இந்த மூன்று கதாபாத்திரமும் மிக வித்தியாசமாக அமைத்துள்ளார்.

மருத்துவமனையில் இன்று நடக்கும் மோசடி தான் கதை. இலவச மருத்துவம் தரும் மாறன் இதனால் வெறும் ஐந்து ருபாய் வாங்கி கொண்டு மருத்துவம் பார்ப்பவர். மேஜிக் செய்யும் வெற்றி, இவர் கொஞ்சம் வித்தியசமானவர். மாறன் அமைதியானவர் வெற்றி கொஞ்சம் ஆவேசமானவர் இவர்களின் உதவியாளர் வடிவேலு,

காளிவெங்கட் மகள் செல்வி ஒரு விபத்தில் அடிபடுகிறாள் இந்த பெண்ணின் மருத்துவத்துக்கு வரும் ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் மருத்துவ ப்ரோக்கர் மற்றும் தனியார் மருத்துவமனை அதிகாரி டாக்டர் இவர்களின் பணத்து ஆசையால் அந்த ஏழை சிறுமி இறந்து போகிறாள். இந்த சிறுமியின் சாவுக்கு உடைந்தை யான அனைவரும் கடத்தபடுகிறார்கள். இவர்களை யார் கடத்தினார் எதற்கு கடத்தினார் என்று ஆரம்பிக்கும் கதை

இந்த அனைவரையும் கடத்தியது வெற்றி. ஆனால் பழி எல்லாம் மாறன் மேல் விழுகிறது. இதனால் மாறன் வெற்றியை தேடுகிறார் அபோது தான் தெரிகிறது உதவியாளர் வடிவேலும் இதற்க்கு உடந்தை என்று வடிவேலுவை பின தொடர்ந்து சென்று மாறன் விஜய் வெற்றி விஜய் இருக்கும் இடத்தை கண்டு பிடிக்கிறார்.
இருவருக்குள் ஏற்படும் மோதல் வடிவேலு தடுத்து அப்பா வெற்றிமாறனுக்கு நடந்த விஷயம் சொல்ல படத்தின் இரண்டாம் பாகம் ஆரம்பம்.

அப்பா வெற்றிமாறன் மதுரை அருகே இருக்கும் கிராமத்தின் தலைவர் அதோடு அந்த கிராமத்துக்கு நல்லது செய்யும் ஒருவர் அவரின் மனைவி நித்யாமேனன் இவர் படித்த வடநாட்டு பெண் இருவரும் காதல் திருமணம் புரிந்தவர்கள் இவர்களுக்கு ஒரு மகன் அவன் தான் மாறன் தனக்கு சொந்தமான கிராமத்தில் ஒரு கோவில் கட்ட இருக்கும் இடத்தில அரசியல்வாதிகள் பாக்டரி கட்ட இடத்தை ஆக்கிரமிப்பு பண்ணுவார்கள் அங்கு சண்டை போட்டு அந்த இடத்தில கோவிலுக்கு அடிக்கல் நாட்டு விழா நடத்தும் போது தீடீர் தீவிபத்து ஏற்படும் அதில் இரண்டு குழந்தைகள் இறந்துவிடும் அப்போது அங்கு இருந்த டாக்டர் பத்து நிமிடம் முன்னாடி வந்து இருந்தா இந்த குழந்தைகளை காப்பாற்றி இருந்து இருக்கலாம் என்று சொல்ல உடனே கோவில் கட்ட இருந்த இடத்தில மருத்துவமனை கட்டுவார் அது எஸ்.ஜே.சூர்யா உதவியுடன் கட்டுவார்.

அந்த மருத்துவமனையை சூழ்ச்சியால் ஏமாற்றி எஸ்.ஜே.சூர்யா பெயருக்கு எழுதிவாங்கிவிடுவார் அந்த நேரத்தில் கர்ப்பிணியாக இருக்கும் நித்யா மேனன் பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு வருவார் இங்கு இருந்து தான் கதை மேலும் சூடுபிடிக்கும் இந்த பிரசவத்தை எஸ்.ஜே.சூர்யா சுகபிரசவம் இல்லாமல் அறுவை சிகுச்சை முறையில் தான் குழந்தை பிறக்கும் என்று மோசடி செய்கிறார் விஜய் குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் பிறக்க வைத்தால் இந்த ஊர் மக்கள் எல்லோரையும் சீக்கிரம் ஏமாற்றி விடலாம் என்று எஸ்.ஜே சூர்யா திட்டம் போடுவார் இதனால் ஏற்படும் பிரச்சனைகள் தான் மீதி படம்

விஜய் மூன்று வேடம் மூன்றும் முத்து போல அமைத்துள்ளார் இயக்குனர் அட்லி சும்மதேரிக்க விடுகிறார் அப்பா தளபதி வெற்றிமாறன் அதேபோல மற்ற இருவரும் சும்மா கலக்கி இருகிறார்கள் என்று தான் சொல்லணும் குறிப்பாக மேஜிக் செய்யும் வெற்றி விஜய் மற்றும் அப்பா ய்ஹலபதி விஜய் தான் படம் மதுரை காரன் மாதிரே அப்படி ஒரு தோற்றம் விஜய்க்கு அதேபோல மேஜிக் வெற்றி கதபாதிரதுக்கு மிகவும் கடுமையாக உழைத்துள்ளார் விஜய் அப்பா விஜய் சண்டை மட்டும் இல்லை அவரை கொலை செய்யும் காட்சியும் மாஸ் என்று தான் சொல்லணும்

சமந்தா மற்றும் காஜல் இந்த இருவரை விட நித்யா மேனன் தான் சிறப்பு இவர் தான் படத்தில் அதிகம் வருகிறார் அதேபோல தன பங்கை மிக சிறப்பாக செய்துள்ளார் பஞ்சாபி பெண்ணுக்கு பஞ்சாபி பெண் மதுரை பெண்ணுக்கு மதுரை என சிறப்பாக நடித்துள்ளார் மூன்று நாயகிகளில் நித்யாமேனன் தான் சிறப்பு

சமந்தா கொஞ்சம் தான் வருகிறார் ஆனால் சிறப்பு விஜய்யை டேய் தம்பி என்று கூப்பிடும் நேரம் அரங்கம் அதிருது அதேபோல ரோஸ் மில்க் குடிக்கும் காட்சி இன்னும் செம என்று தான் சொல்லணும் கஜல் படத்தில் வருவதும் போவது தெரியவில்லை. காரணம் படம் முழுக்க விஜய் தான் இயக்குனர் அட்லி மிக சிறப்பாக பயன்படுத்தியுள்ளார்.

கோவை சரளா வடிவேலு இருவரும் காமடி என்று சொல்லவதை விட குணசித்திரம் என்று சொன்னால் சரியாக இருக்கும் சத்யாராஜ் விஜய் செய்யும் கொலைகளை கண்டுபிடிக்கும் போலீஸ் கொடுத்த வாய்ப்பை மிக நேர்த்தியாக செய்துள்ளார். பல கதாபாத்திரம் தேவையா என்று யோசிக்கவைக்கிறது அப்படி யோசிக்கவைக்கும் பாத்திரம் தான் சத்யன்

படத்துக்கு மிக பெரிய பலம் என்றால் இசை ஏ.ஆர்.ரகுமான் படத்தில் பாடல்கள் எல்லாம் செம அருமை அதேபோல பின்னனி இசையும் செம என்று தான் சொல்லணும்

படத்தின் மிக பெரிய பிளஸ் என்றால் அது எஸ்.ஜே சூர்யா என்று சொல்லணும் மிக சிறந்த ஒரு வில்லன் நடிகர் நம்ம தமிழ் சினிமாவுக்கு கிடைத்துள்ளார் என்று தான் சொல்லணும்

மொத்தத்தில் மெர்சல் தெறிக்க விடுகிறது Rank 4/5

Leave a Reply