Wednesday, October 28
Shadow

சர்வதேச அளவில் அமீர்கான் படத்தையும் பின்னுக்கு தள்ளிய விஜய்யின் மெர்சல்

பொதுவாக விஜய் படங்கள் என்றாலே ரிலீஸ் நேரத்தில் கடந்த சில ஆண்டுகளாக பிரச்சனை வந்து கொண்டேதான் இருக்கிறது அதை மீறி தான் ஒவ்வொரு படமும் சாதனை புரிந்து வருகிறது அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் மெர்சல் ரிலீஸ் முன்னேவும் பல பிரச்சனை கோர்ட் எல்லாம் ஏறி தான் படம் வெளியானது இப்ப படம் ரிலீஸ் ஆகியும் படம் ஒரு சில அரசியல் கட்சியால் வெற்றியை ருசிக்க முடியாத அளவில் பிரச்சனை இதையும் மீறி படம் உலக அளவில் சரித்திர சாதனை புரிந்து வருகிறது

அட்லீ, விஜய்யின் இரண்டாவது கூட்டணியில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியான படம் மெர்சல். தீபாவளி அன்று வெளியான இப்படத்தை ரசிகர்கள் எப்படி வரவேற்றார்கள் என்பதை நாம் பார்த்திருப்போம். ஒவ்வொரு இடத்தில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் பல சாதனைகளை செய்து வருகிறது மெர்சல்.

இந்த நிலையில் இப்படம் சர்வதேச அளவில் ஹிந்தி படங்களான அமீர்கானின் Secret Superstar மற்றும் அஜய் தேவ்கனின் Golmaal Again படங்களை தாண்டி அமோகமாக வசூலித்து வருவதாக பிரபல திரைப்பட வர்த்தக ஆய்வாளர் தரண் ஆதர்ஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

Leave a Reply