
மெர்சல் இதுவரை பல வித பிரச்சனைகளை சந்தித்து வந்தது இருந்தும் படம் மிக பெரிய வெற்றியடைந்தது . வசூலில் மிக பெரிய சாதனை என்று சொல்லணும் அந்த அளவுக்கு மிக பெரிய வெற்றி இதற்கிடையில் நேற்று தெலுங்கில் படம் வெளியாகி அங்கும் படம் மிக பெரிய வெற்றியடைந்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க
இந்த படம் முதலில் சந்ததித்த பிரச்சனையை மீண்டும் சந்தித்தது வருகிறது மன்னிக்கவும் படம் இல்லை படத்தின் இயக்குனர் என்று தான் சொல்லணும் பொதுவாக இயக்குனர் அட்லீ இயக்கிய படங்கள் எல்லாமே மற்ற படத்தின் காப்பி என்று பரவலாக பேச்சு இருக்கு இதை ஒரு போதும் ஒத்துக்கொள்ளாத இயக்குனர் அட்லீக்கு இப்போது மிக பெரிய பிரச்னை வந்துள்ளது மெர்சல் படத்தின் கதை மூலம்
ஆம் இந்த படத்தின் முதல் பார்வை வெளியானதும் இந்த படம் மூன்று முகம் அபூர்வ சகோதர்கள் படத்தின் காப்பி என்று பலர் கூறினார் இப்போது அது தான் பிரச்னை இந்த படம் வெளியானவுடன் இயக்குனர் வெங்கட் பிரபு நேரடியாக இந்த படம் பழைய பஞ்சு அருணாச்சலம் அவருடைய கதை என்று ட்விட்டரில் கலாய்த்தார் பின்னர் நடிகர் கமல்ஹாசன் படத்தை பார்த்து விட்டு அட்லீ மற்றும் விஜய் இருவரையும் அழைத்து பாராட்டும் போது போட்டோ எடுக்கும் பொது பின்னாடி அபூர்வ சகோதர்கள் படத்தின் புகை படத்தை வைத்தார் இதை வைத்து சமூக வலைத்தளங்களில் அட்லீயை பலர் கிண்டல் செய்தனர்
இப்போது வந்துள்ள பிரச்னை விஜய்யை வைத்து மெர்சல் படத்தை இயக்கிய அட்லீக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மூன்று முகம் படத்தின் ரீமேக் உரிமத்தை வைத்துள்ள ஃபைவ் ஸ்டார் பிலிம்ஸ் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரீமேக்கிங் இயக்குனர்கள் மத்தியில் ப்ரீமேக்கிங் இயக்குனர் அட்லீ என தயாரிப்பாளர் சங்கம் விமர்சித்துள்ளது.
