Thursday, April 23
Shadow

அறம் – திரைவிமர்சனம் ( இந்திய சினிமாவின் பெருமை) Rank 4.75/5

தமிழ் சினிமாவில் அத்திபூ பூப்பது போல ஒரு சில சிறந்த படங்கள் வரும் அப்படி ஒரு மிக சிறந்த படம் என்றால் அது அறம் என்று தான் சொல்லணும். மிக சிறந்த படம் வர்த்தகரீதியாக எந்த வித அம்சங்களும் இல்லாமல் கதையை நம்பி மட்டும் எடுக்கப்பட்ட படம் என்றால் அது இந்த படம் மரத்தை சுத்தி டுயட் கவர்ச்சி நடனம் கவர்ச்சி உடைகள் சதை பறந்து பறந்து சண்டை ஒரே சமயதி பத்து கார்கள் மோதுவது பேய் பயம் இசையில் அலறல் இப்படி எதுவும் இல்லாமல் உங்களை கட்டி இழுக்கும் ஒரே திரைகதை.

காட்சிக்கு காட்சி என்ன நடக்கும் என்று நாற்காலி நுனிக்கு வரவைக்கிறார் இயக்குனர் கோபி நைனார் தமிழ் சினிமாவில் இப்படி ஒரு மிரட்சியா என்று வியக்கும் அளவுக்கு மிக சிறந்த கதை உலக தரம் வாய்ந்த படம் இந்த பட தான் உண்மையில் ஹாலிவுட் படங்களுக்கு சாவல் விடும் படம் பல நூறு கோடிகள் இல்லாமல் புதுவித தொழில்நுட்பம் இல்லாமல் ஒரு அசல் தமிழன் சாதனை என்றும் சொல்லலாம் அயல் நாட்டு கலைஞர்கள் இல்லாமல் முழுக்க முழுக்க தமிழர்களால் உருவானது

இந்த படத்தின் இயக்குனர் கோபி நைனார் தமிழ் சினிமாவில் மிக பெரிய சர்ச்சைக்கு உள்ளானவர் ஆம் விஜய் நடித்த கத்தி படம் இவருடையது என்று இவர் கோர்ட் வரை போயும் இவருக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது அதற்கான பல மடங்கு பேர் புகழ் இந்த படம் மூலம் இவருக்கு கிடைத்து இருக்கு ஒட்டு மொத்த பத்திரிக்கையாளர்கள் பாராட்டும் இந்த இயக்குனரையும் படத்தையும் அந்த அளவுக்கு இக சிறந்த படம் இன்று இந்த படத்தை பார்த்தல் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் விஜய் இவரிடம் கண்டிப்பாக இவர்களால் மனதில் அவர்களுக்கே தெரியாமல் ஒரு குற்ற உணர்ச்சி கண்டிப்பாக இருக்கும் என்பதி எந்த வித அச்சம் இல்லை

இந்த படத்தில் நயன்தாரா அறிமுக நடிகை சுனு லக்ஷ்மி இதுவரை சின்ன கதாபத்திரத்தில் நடித்த ராம் கதையின் நாயகனாக காக்கா முட்டை சிறுவன் ரமேஷ், மற்றும் விக்னேஷ் சிறுமி தன்ஷிகா வேலா ராம மூர்த்தி கிட்டி பழனி பட்டாளம் மற்று பலர் நடிப்பில் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் ஜிப்ரான் இசையில் கோபி நைனார் இயக்கத்தில் கோட்டபாடி ரமேஷ் தயாரிப்பில் வெளிவந்து இருக்கும் மிக சிறந்த படம் தான் அறம்

படத்தின் டைட்டில் கிராபிக்ஸ்யிலே படத்தோட கதையை ஆரம்பிக்கும் இயக்குனர் என்று தான் சொல்லனும் படத்தின் கதை ஒரு சின்ன லைன் தான் ஆழ் குழாய் கிணற்றில் ஒரு குழந்தை விழுந்து விடுகிறது அந்த குழந்தையை எப்படி காபற்றுகிரார்களா இல்லையா என்பது தான் கதை.

ஸ்ரீ ஹரிகோட்டா அருகில் இருக்கு ஒரு சின்ன கிராமம் தண்ணீருக்கு பல மைல் கடந்து சென்று தண்ணீர் எடுக்கும் இந்த கிராமத்தில் அடிப்படை வசதிகூட இல்லாதவர்கள் அந்த கிராமம் இந்த மாவட்டத்தின் கலக்டர் நயன்தாரா இந்த கிராமத்தில் வசிக்கும் ராம் மற்றும் சுனு லக்ஷ்மி தம்பதியினர் குழந்தை தன்சிகா ஆழ் குழாய் கிணற்றில் விளையாடும் போது தவறி விழுந்து விடுகிறது இந்த குழந்தையை காப்பாற்ற போதிய வசதி இல்லை நம்ம அரசாங்கத்திடம் அதே போல அரசியல்வாதிகளின் அலட்சிய போக்கு இவைக்கு எதிர் குரல் கொடுக்கும் மாவட்ட கலக்டர் நயன்தாரா ஒரு ராக்கெட் விட பல ஆயிரம் செலவு செய்யும் அரசாங்கம் ஒரு குழந்தையை காப்பாற்ற எவ்வளவு அலட்சிய படுத்துகிறார்கள் என்பதும் தான் இப்படத்தின் கதை

ஒருபக்கம் குழந்தையை எப்படியாவது காப்பற்றவேண்டும் என்ற நோக்கத்துடன் நயன்தாரா ஒரு பக்கம் போதிய வசதி இல்லாதால் அலட்சிய போக்கு காமிக்கும் அதிகாரிகள் ஒரு பக்கம் அரசியவாதிகளில் குறுக்கிடு இவை அனைத்தையும் மீறி இந்த குழந்தையை எப்படி காப்ற்றுகிறார் நயன்தாரா என்பது தான் மீதி கதை இதனால் நயன்தாரா அரசாங்கத்திடமும் அரசியல்வாதிகளிடமும் ஏற்படும் பிரசைகளை மிக அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்

நயன்தாரா இதுவரை கவர்ச்சியாகவும் காமெடியாக பார்த்த இவரை இரு கரம் கூப்பி மரியாதை செலுத்தும் அளவுக்கு நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். நிச்சயம் இந்த கதாபாத்திரம் ஏற்று நடித்த நயன்தாரா மீது மரியாதை அதிகமாகவிட்டது. அவரின் தோற்றம் அவரின் உடை எல்லாமே ஒரு நிஜ மாவட்ட கலக்டர் நம் கண்ணுமுன்னே வந்ததுபோல ஒரு பிரமிப்பு அதே போல நயந்தாராகுள் இப்படி ஒரு திறமை இதுவரை யாரும் பயன் படுத்தவில்லை வெளிக்கொணரவும் இல்லை என்ற ஒரு வித ஆதங்கமும் இருக்கு நயன்தாரா ஒரு நடிகையான வாழ்கைக்கு இந்த படம் தான் அர்த்தம் என்று சொல்லணும் நிச்சயம் இந்த முறை பல விருதுகள் அவருக்கு காத்து இருக்கு

படத்தின் அடுத்த ஆணிவேராக சுனு லக்ஷ்மி புதுமுகம் என்றாலும் பல நூறு படங்கள் பண்ண ஒரு அனுபவம் போல தன் நடிப்பில் வெளிபடுத்தியுள்ளார் ஒரு நகர்புற பெண் இப்படி ஒரு கிராமப்புற பெண்ணாக மாறி தன் சிறந்த நடிப்பை வெளிபடுத்தி இருப்பது தமிழ் சினிமாவுக்கு ஈண்டும் ஒரு ஷோபா கிடைத்தது போல இருக்கு அழஊதமான நடிப்பு தன் குழந்தை எப்படியாவது காப்ற்றுங்கள் என்று கதறும் போதும் சரி தன் குழந்தை காணவில்லை என்று தேடும் போதும் சரி நடிப்பில் நம் கண் முன்னே நிற்கிறார்.

ராம் பல படங்களில் சின்ன சின்ன கதாபத்திரத்தில் நடித்தவர் குறிப்பாக அடியாளாக வந்தவர் இந்த படத்தி ஒரு முழு நீள பாத்திரம் அதை இகவும் சிறப்பாக நடித்துள்ளார் சின்ன கதாபாத்திரம் என்றாலே சுமா பின்னி எடுக்கும் ராம் இந்த படத்தில் தன்சிகா அப்பாவாக நடித்துள்ளார் இவரும் சிறப்பான நடிப்பை வேளிபடுதியுள்ளார்.

மட்டறு கக்கா உதட்டை படத்தில் நடித்த ரமேஷ் மற்றும் விக்னேஷ் சிறுமி தன்சிகா பழனி பட்டாளம் எல்லோரும் மிக சிறந்த நடிப்பை வெளிபடுதியுள்ளனர்

இயக்குனர் கோபி நைனார் எடுத்த கதை களம் முற்றிலும் புதுமை ஒரு சோசியல் கதையை இப்படி கமர்சியலாக கொடுத்து வெற்றியடையும் என்று நிரூபித்தவர் இயக்குனர் அதோடு தன் கதையை மட்டும் நம்பி எடுத்துள்ளார் அதற்கான நட்சத்திரத்தை தேர்ந்த்டுத்து மிக சிறந்த படத்தை கொடுத்துள்ளார். இவருக்கு அருமையான தொழில் நுட்ப கலைஞர்கள் அமைந்தது மிக சிறப்பு எல்லாவிதத்திலும் மிக சிறந்த ஒரு படம்

இந்த முறை விருது கொடுக்கும் கமிட்டிக்கு எந்த வித குழப்பம் இல்லாமல் விருது கொடுப்பார்கள் காரணம் எல்லா விருதும் இந்த படத்துக்கு தான் சிறந்த நடிகை சிறந்த குனசித்தர நடிகை சிறந்த நடிகை சிறந்த குழந்தை நட்சத்திரம் சிறந்த இயக்குனர் சிறந்த ஒளிப்பதிபவு சிறந்த இசை சிறந்த எடிட்டர் இப்படி என்ன என்ன இருக்கோ எல்லாமே இந்த படத்துக்கு தான்

இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் கோட்டபாடி ராஜேஷ் மிக தைரியம் எந்த வித கமர்சியல் விஷயம் இல்லாத ஒரு கதையை அதுவும் ஒரு புதுமுக இயக்குனரை நம்பி எடுத்தது இந்த மாதிரி தைரியம் உள்ள தயாரிப்பாளர்கள் வரும் பொது நிச்சயம் தமிழ் சினிமாவில் மிக சிறந்த படங்கள் வரும்

அறம் தமிழ் சினிமாவின் இல்லை இந்திய சினிமாவின் மைல் கல் Rank 4.75/5

Leave a Reply