
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நிராகரிக்கப்பட்ட விஷாலின் வேட்பு மனு மீண்டும் ஏற்கப்பட்டது.
நடிகர் விஷால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்திருந்தார். இன்று மாலை இவரின் மனுதாக்கலை நிராகரித்தது தேர்தல் ஆணையம். நடிகர் விஷால் தரப்பினர் தேர்தல் ஆணையரிடம் கேட்ட போது சில ஆவணங்களின் குளறுபடியால் நிராகரித்துவிட்டது என்று தேர்தல் ஆணையர் கூறினார்.
இதை ஏற்க மறுத்த விஷால் நான் அளித்த ஆவணங்களை மறுஆய்வு செய்யும் படி கேட்டுக் கொண்டார். திடீர் திருப்பமாக மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், சில திருத்தங்களுக்கு பிறகு நடிகர் விஷாலின் மனுதாக்கல் ஏற்கப்பட்டது. இது போன்ற ஒரு சம்பவம் தமிழக அரசியல் வரலாற்றிலே நடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
