Monday, April 27
Shadow

ரஜினியும் சில அரைவேக்காடுகளும்… சரியான பதிலடி!

வெறும் 20 நிமிட பேச்சு ….
அரசியல்வியாதிகள் அலறுகிறார்கள்..
பல வருங்கால முதல்வர்களுக்கு பீதி கிளம்பிவிட்டது…
மீடியா வியாபாரிகள் தொழில் சூடு பிடித்துவிட்டது…

ஆனால் சில அரைவேக்காடுகள் கேட்டதையே திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டிருக்கிறது… இதுவரை வந்த அனைத்து விமர்சனங்களுக்கும் ரஜினிகாந்த் விளக்கம் கொடுத்தபின்னரும் நம் அறிவு ஜீவிகளின் கல்லெறிதல் நிற்கவில்லை. அப்பேற்பட்ட உலக மகா யோக்கியர்களுக்குத்தான் இந்த பதிவு…

ரஜினியின் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் :

ஒரு தமிழந்தான் முதல்வராக வேண்டும். ரஜினி வரக்கூடாது…
சினிமாகாரன் ஆண்டது போதும்.
இதுவரை தமிழ் மக்களுக்கு என்ன செய்தார் ரஜினி ?
எந்த பிரச்சனைக்கும் குரல் கொடுக்கவில்லை ?
கர்நாடகாவில் சொத்து வாங்கி குவித்துள்ளார்.
படம் வெளிவரும்போது ஓடுவதற்க்காக மட்டும் அரசியல் பேசுவார்…

தில் இருப்பவர்கள் இந்த பதில்களை எதிர்கொள்ளலாம்.

ஏப்பா..என்னமோ வேற்று மொழிக்காரன் படையெடுத்து வந்து தமிழ்நாட்டை பிடித்து ஆள்கிறமாதிரி பேசறீங்க ? நீங்க ஓட்டு போட்டுத்தான தேர்ந்தெடுக்கறீங்க ?
ஒரு நல்ல தமிழனை முதல்வராக தேர்ந்தெடுக்க எதுப்பா உங்கள தடுக்குது ? தமிழன், தமிழன்னு கூப்பாடு போடற நீதான பெருந்தலைவர் காமராசரை தோற்கடிச்சே ?
நல்லக்கண்ணு மாதிரி அப்பளுக்கற்ற தமிழனை கோயமுத்தூர்ல தோற்கடிச்சவர்கள்தான நீங்க ?
முதல்ல தமிழன்னா யாருன்னு தெரிஞ்சுட்டு பேசுங்க……உணர்வாலும்,சிந்தனையாலும் தமிழ் மொழியை நேசிப்பவனும், தமிழ் மொழி பேசும் நாட்டில், தமிழ் மொழி பேசும் மனிதனாகவே எவன் வாழ்கிறானோ அவனே உண்மையான தமிழன்.

ரஜினியை மராட்டி என்றும், கன்னடன் என்றும் மொழிச் சாயம் பூசும் அப்ரண்டீஸ்களே…ஒருவனுடைய மொழி வெறியும், சாதி வெறியும் வெளிபடுவது அவன் எங்கு வாழ்கிறான் என்பதிலோ, எங்கு சொத்து சேர்க்கிறான் என்பதிலோ, அவன் யாருடன் வேலை செய்கிறான், யாரை வேலைக்கு வைத்துக் கொள்கிறான் என்பதிலோ அல்ல….ஒருவனுடைய மொழி வெறியும், சாதி வெறியும் அப்பட்டமாக வெளிபடும் இடம் அவன் தன் மகனையோ, மகளையோ யாருக்கு மணம் முடித்து வைக்கிறான் என்பதில்தான். அதில் மட்டுமே ஒருவனுடைய உண்மையான முகம் வெளிபடும். ரஜினி நினைத்திருத்தால் , அவருக்கு மொழி வெறி இருந்திருந்தால், அவரால் ஒரு மராட்டிக்கு தன் மகள்களை திருமணம் செய்து வைத்திருக்க முடியாதா ? ரஜினி பிறப்பால் மராட்டியராக இருந்தாலும் தான் வாழும் தமிழ்நாட்டிற்க்கு எப்படி உண்மையாக இருக்கிறார் என்பதை பார்த்து பாலிவுட் நடிகர்கள் பாடம் கற்கவேண்டும் என்று பால் தாக்கரே சொல்கிறார் ..ஆனால் உங்களுக்கு புரியவில்லை …

ஒரு தமிழ் பெண்ணை திருமணம் செய்துகொண்டு, எப்பேற்பட்ட எதிர்மறை சூழ்நிலைகள் வந்தபோதும், தன் தமிழ் அடையாளம் கடுமையாக விமர்சிக்கப்பட்ட போதும், தமிழ்நாட்டை விட்டு போகிறேன் என்று கூவாமல், இது என்னுடைய ஊர், இதைவிட்டு நான் எங்கே போவேன் என்று கேட்டவரை, தன் இரு மகள்களையும் தமிழை தாய்மொழியாகக் கொண்ட தமிழ் பையன்களுக்கு மணம் முடித்து கொடுத்து, தமிழ் குடும்பத்தில் சம்பந்தம் வைத்துக் கொண்டு, தன் வருங்கால சந்ததியை முழுக்க முழுக்க தமிழ் சந்ததியாகவே மாற்றிவிட்ட ரஜினியை பார்த்து நீ தமிழனா என்று கேட்க யாருக்கும் உரிமை இல்லை.
அடுத்த தலைமுறையில் இருந்து ரஜினியின் சந்ததியினர் யார் என்றால் தமிழன் என்று சொல்வதை எவனாவது தடுக்கமுடியுமா அல்லது மறுக்கமுடியுமா ?

ரஜினியின் மூன்று பேரன்களுக்கும் தாய்மொழி தமிழ். அவர்கள் தமிழர்களுக்கு பிறந்த தமிழர்கள். இதை மாற்ற முடியுமா ? தமிழன் தமிழன்னு கத்துகிறவர்கள் எல்லாம் என்னத்த சாதிச்சிங்க ? ஒரு கவுன்சிலர் சீட்டு ஜெயிக்க வக்கில்லாதவன் எல்லாம் நாம் தமிழர்னு கூவுறான் ….

அடுத்து என்ன ? சினிமாகாரன் முதல்வராக வேண்டாமா ? ஒத்துக்கறோம்…சினிமாகாரன் முதல்வராக வேண்டாம் …சினிமாகாரன் மட்டும் அல்ல …டாக்டர்,இஞ்சினியர், வக்கில், போலிஸ் இப்படி யாரும் முதல்வராக வரவேண்டாம்…ஒரு நேர்மையான மனிதன் முதல்வராக வரட்டும். ரஜினி என்கிற நடிகன் என்றைக்கும் அரசியலுக்கு வரப்போவதில்லை, ஆனால் ரஜினி என்னும், நேர்மையான, யோக்கியமான மனிதன் வருவான் …யாரும் தடுக்க முடியாது .

ஒரு பத்து பேரை வைத்துக் கொண்டு ஒரு சிறு நிறுவனம் நடத்துபவர் கூட அவருடைய காசாளர் அல்லது கல்லாவில் இருப்பவர் நேர்மையாக இருக்கவேண்டும் என்றுதான் பார்க்கிறார். தன் பணத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஒரு நேர்மையான, தூய்மையான மனிதனிடம்தான் கொடுப்பாரே தவிர, திருடனானாலும் பரவாயில்லை என்று தன் சாதிக்காரனுக்கோ, தன் மொழிக்காரனுக்கோ கொடுக்கமாட்டார். அரசாங்கம் என்பது என்ன ? முதல்வர், அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் யார் ? நம் பணத்தை, நாம் வரியாக செலுத்தும் பணத்தை நிர்வாகிக்க நம்மால் நியமிக்கப்படும் வேலைக்காரர்கள்…அவர்களின் அடிப்படை தகுதி என்னவாக இருக்கவேண்டும் ? நேர்மை, நாணயம், தூய்மை … ஒரு சிறு நிறுவனத்துக்கு காசாளரை நியமிக்கக் கூட அடிப்படை தகுதியாக நேர்மையை பார்க்கும் நமக்கு, நாம் உழைத்து சம்பாதித்து வரியாக செலுத்தும் ஆயிரக்கணக்கான கோடிகளை நிர்வாகிக்க அடிப்படை தகுதியாக எதை பார்க்க தெரிந்திருக்க வேண்டும் ? சாதியையா, மொழியையா ? இனத்தையா ? இல்லை நேர்மையையா ?

தன் பாபா படம் சரியாக போகவில்லை என்று தெரிந்ததும், அதனுடன் தொடர்புடையவர்கள் எவரும் பணம் இழக்கக்கூடாது என்பதற்காக வலிய வந்து பணத்தை திருப்பிக் கொடுத்தவர் ரஜினிகாந்த். ஒரு தொழிலில் லாப, நஷ்டங்கள் சகஜம். நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும் என்கிற எந்த அவசியமும் இல்லாத போதே அதை வலிய வந்து செய்கிற ஒருவன் அடுத்தவன் பணத்தை எந்த அளவுக்கு பாதுகாப்பான் என்பதை புத்தியுள்ள எவனும் புரிந்து கொள்வான். என் பணத்தை நிர்வகிக்க எனக்கு நாணயமானவன் வேண்டும், அவன் மொழி,சாதி,மதம் பற்றி எனக்கு கவலையில்லை.

உன் சாதிக்காரனை உன் சொந்த வீட்டு விசேசங்களுக்கு வைத்துக் கொள். உன் மதத்தை சார்ந்தவனை உன் வழிபாட்டு தலங்களுக்குள் வைத்துக் கொள். ஆனால் ஒரு நேர்மையானவனை உன் பணத்தை நிர்வகிக்க வைத்துக் கொள்…இல்லைனா உன்னை ஆள ஆண்டவனா வருவான் ? திருடந்தான் வருவான்…

அடுத்து என்ன ? ரஜினி தமிழ்நாட்டுக்கு என்ன செய்தார் ? இப்படி கேட்க வெட்கமாயில்லை ? உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இருக்க, உங்கள் பிரதிநிதிகள் இருக்க, உங்கள் பணத்தை கோடிக்கணக்கில் கொள்ளையடிப்பவன் இருக்க, தன் கடும் உழைப்பால் வாழ்க்கையின் அடிமட்டத்தில் இருந்து முன்னேறி சம்பாதித்து சுயமாக தன் பணத்தில் மிக எளிமையாக எந்த ஆடம்பரமும் இன்றி வாழும் ஒருவனை பார்த்து அதிகாரமாக பிச்சை கேட்க வெட்கமாயில்லை ? நீங்க ஓட்டு போட்ட MLA,MP,Councilor இவங்க என்ன செஞ்சாங்கன்னு கேட்க துப்பில்லாதவர்கள் ஒருவன் சம்பாதித்த பணத்தை கேட்கும் அளவுக்கு தரம்தாழ்ந்து போனதேன் ?

அடுத்து என்ன ?எந்த பிரச்சனைக்கும் ரஜினிகாந்த் குரல் கொடுக்கவில்லை…

யப்பா சாமிகளா…என்னப்பா குரல் கொடுக்கனும் ? குரல் கொடுத்தவனெல்லாம் என்னத்த சாதித்தான் ? நெய்வேலில கரண்ட புடிங்கிட்டானா ? கேரளாவுக்கு போற காய்கறிகளை நிறுத்திட்டானா ? கர்நாடகாவுக்கும், கேரளாவுக்கும் கடத்தப்படும் மணலை தடுத்துட்டானா, மீனவர் கொலைகளை தடுத்துட்டானா ? காவிரி டெல்டாவை பாலைவனமாக்கியதை தடுத்துட்டானா, விவசாயிகளுக்கு வாழ்வளித்துவிட்டானா ? இனப்படுகொலையை தடுத்துட்டானா ? வீட்டுல உட்கார்ந்துட்டு, மேனேஜரை வைத்து எவன் வேனாலும் அறிக்கை கொடுக்கலாம்பா …காலைல வீட்டுல நல்லா சாப்பிட்டு வந்துட்டு, சாயந்திரம் வரைக்கும் உண்ணாவிரதம் உட்கார்ந்துட்டு வீரவேசமாக எவன் வேணாலும் சவுண்டு கொடுக்கலாம் ..அதனால் வந்த பலன் என்ன ? உனக்கு ஒரு காரியம் நடக்க வேண்டுமா அல்லது சவுண்டு விடவேண்டுமா ?

ரஜினிகாந்த் என்ன செஞ்சார்னு கேட்கறே ? அவருக்கா நீ ஓட்டு போட்டே ? ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தவனை கேட்க தில் இல்லாத பேடிப் பசங்க ரஜினியை பார்த்து கேள்வி கேட்கறீங்க ….

அடுத்து ரஜினி கர்நாடகாவில் சொத்து வாங்கி குவித்துள்ளார் …
அட பாவிகளா, தான் சுயமாக சம்பாதித்த பணத்தை உலகின் எந்த மூலையிலும் முதலீடு செய்ய அனைவருக்கும் உரிமை உண்டு. அது அவர் சம்பாதித்த பணம் ..அவர் எங்க வேணாலும் சொத்து வாங்குவார் …உனக்கென்ன நோகுது ? ஏன், பெங்களூரில் சொத்து வைத்திருப்பவர்களில் நம்ம தானை தலைவர்கள்தான் அதிகம் என்கிற அடிப்படை உண்மை கூட உனக்கு தெரியாதா ? ரஜினி கர்நாடகாவில் சொத்து வாங்கி குவித்ததை நீ பாத்தியா ? யாரோ வாந்தி எடுத்ததை உண்டுவிட்டு வந்து மறுபடியும் இங்க வந்து எதுக்க்குப்பா வாந்தி எடுக்கறீங்க ?

வடநாட்டு அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ இலவசம்னா காலைல 4 மணிக்கு போய் வரிசைல நின்னு வாங்குற நீ ரஜினியின் முதலீட்டை பற்றி பேசறியா ? அம்பானி என்ன உன்னோட சாதிக்காரனா, மொழிக்காரனா இல்ல மச்சானா ? அத ஓசியில வாங்கி அனுபவிக்க தெரியுதில்ல, அப்ப எங்க போச்சு புத்தி ?

அடுத்து, படம் ஓடுவதற்க்காக அரசியல் பேசுகிறார்…
அட தற்குறிகளா ..ரஜினி முதன் முதலில் அரசியல் பேசியது பாட்ஷா வெற்றி விழாவில் , அதற்கு பின் அவர் நடித்த படங்கள் 11, அதற்கு முன்னர் 145க்கும் மேல் ..அந்த 145ல் 90% வெற்றி படங்கள். அப்ப அவர் என்ன அரசியல் பேசினாரு ?பாட்ஷா படம் 378 நாட்கள் ஓடிய மாபெரும் வெற்றி படம் . இதுவரை முறியடிக்கபடாத சாதனை அது . அந்த பட துவக்கத்தில் ரஜினி அரசியல் பேசவில்லை, அதன் வெற்றி விழாவில பேசினார். அது கிடக்கட்டும், அவர் அரசியல் பேசுனா நீ போய் படம் பாத்துடுவியா ? 50 ரூபா கொடுத்து திருட்டு விசிடில படம் பார்க்கிறவந்தான நீ ? சந்திரமுகி, கபாலி, சிவாஜி படங்கள் வெளியானபோது அவர் என்னப்பா அரசியல் பேசினார் ? அந்த படங்கள் மெகா ஹிட் ஆகலையா ? ஆமா ரஜினி, படம் ஓடுவதற்க்காக அரசியல் பேசறார்னு சொல்றியே அவர் கதை வசனம் எழுதி, முழுக்க, முழுக்க அரசியல் பேசி நேரடியாக நடித்த பாபா ஏன் சிவாஜி,எந்திரன் அளவுக்கு வெற்றி பெறவில்லை ? சும்மா பேசினாலே படம் ஓடும்னா , படத்திலயே பேசினா படம் பிச்சுக்கிட்டு ஓடனும்ல ? ஏன் ஓடலை ? இதெல்லாம் யோசிக்க மாட்டிங்களே….

இப்படி எந்த கேள்விக்கும் உங்ககிட்ட பதில் இல்லை . ஏன்னா ரஜினியை தமிழன் இல்லை, சினிமா நடிகன் என்று மட்டுமே உங்களால் விமர்சிக்கமுடியுமே தவிர அவரை நேர்மையற்றவராகவோ, பொய் பேசுபரவாகவோ, மத்தவன் பணத்தை ஆட்டையை போட்டவராகவோ உங்களால் விமர்சிக்க முடியாது …

மற்ற மொழிக்காரன் வேண்டாம், சினிமா நடிகன் வேண்டாம்னு கத்தற நீங்க என்னைக்காவது ஊழல்வாதி வேண்டாம், திருடன் வேண்டாம்னு கத்தியிருக்கிங்களா ? அப்படி கத்தியிருந்திங்கன்னா என்னைக்கோ நீங்க உருப்படிருப்பிங்க, நம்ம நாடும் உருப்பட்டிருக்குமே …

இப்பவும் ஒன்னும் கெட்டு போகலை ..ரஜினி அரசியலுக்கு வந்தால், அவருக்கோ, அவரை எதிர்த்து நிற்பவருக்கோ ஓட்டுப் போட செவ்வாய் கிரகத்திலிருந்து யாரும் வரப்போவதில்லை..நீயும் நானும்தான் ஒட்டு போடப் போகிறோம்…அங்க காட்டு உன்னோட எதிர்ப்பை …ரஜினி வேண்டாம்னா போ..போய் ஊழல்வாதிக்கும், திருடனுக்கும், சாதி வெறிக்காரனுக்கும் ஓட்டு போடு..யார் வேண்டாம்னா ..அத விட்டுட்டு இப்படி உளறி கொட்டி தமிழன்ங்கற பெயரை கெடுக்காதிங்க….500 ரூபாய்க்கும், குவார்டருக்கும், பிரியாணிக்கும் ஓட்டை விற்க்கும் யாருக்கும் ரஜினிகாந்த் அவர்கள் பெயரை சொல்லக் கூட யோக்கியதை இல்லை….

ரஜினியை அரசியலுக்கு வரக்கூடாதுன்னு சொல்றவன் சரியான யோக்கியனா இருந்தா அவரை எதிர்த்து நின்னு ஜெயிச்சு காட்டுங்க பார்ப்போம் …அப்ப ஒத்துக்கரேன்…அதுவரைக்கும் ….

Leave a Reply