Sunday, November 8
Shadow

ஏமாலி – திரைவிமர்சனம் (நாகரிக கோமாளி) Rank 2.5/5

தமிழ் சினிமாவில் நல்ல கதைகள் வந்துகொண்டு தான் இருக்கிறது எல்லா இயக்குனர்களும் நல்ல கதை என்று தான் எழுதுகிறார்கள் ஆனால், அதை திரைக்கதை எழுதும் போது இவர்களின் எண்ணத்தை மாற்றிகொள்கிறார்கள் நாகரிக காலத்துக்கு ஏற்ப திரைக்கதை அமைக்கிறேன் என்று கோமாளித்தனம் செய்கிறார்கள் என்று தான் சொல்லணும் .

அப்படியான ஒரு படம் தான் ஏமாளி ஆம் நல்ல கதை அனால் தேவையில்லாத திரைகதை தேவையில்லாத பாடல்கள் என்று கோட்டை விட்ட படம் தான் ஏமாளி இளம் ரசிகர்களுக்கு உண்மையான திருவிழா கொண்டாட்டம் மற்றவர்களுக்கு சமுதாய சீர்கேடு என்று தான் சொல்லணும் நாட்டில் எத்தனை விதமான செக்ஸ் இருக்கோ அத்தனை பற்றியும் விவாதம் செய்துள்ளார் இயக்குனர் திழ் சினிமாவின் மிக சிறந்த இயக்குனர்களில் ஒருவரான வி.இசட். துரை அஜித் வைத்து முகவரி என்று காலத்தால் அழிக்கமுடியாத படத்தை இயக்கிய துரை தான் இந்த படத்தின் இயக்குனர்

படம் முழுக்க இன்றய காலத்துக்கு ஏற்ப ஒரு படம் இயக்குகிறேன் என்று சொல்லி கலாசார சீர் கேடு மொத்தத்தையும் காண்பிதுள்ளார். படம் முழுக்க வக்கிரம் படம் முழுக்க நாகரிக கோமாளித்தனம் என்று தான் சொல்லணும். தேவை இல்லாமல் செக்ஸ் காட்சிகள். வெற்றி வேண்டும் என்பதற்கு கதை மேல் நம்பிக்கை வைக்காமல் சதை மேலும் இரட்டை அர்த்த வசனங்கள் மீதும் நம்பிக்கைவைத்துள்ள இயக்குனர் என்று தான் சொல்லணும்

தமிழ் சினிமாவின் மக்கள் நலன் விரும்பி என்று சொல்லும் சமுத்திரகனி அவரும் இயக்குனருடன் சேர்ந்து தடம் புரண்டு விட்டார். கடைசியாக தன் கருத்தை நியாபடுத்துகிறார் என்று தான் சொல்லணும்.நமக்கு என்ன வரும் நம்மை மக்கள் எந்த கோணத்தில் பார்கிறார்கள் என்று பார்க்கவேணும் யோசிக்கவேணும் அதை விட்டு தன்னை தானே ஏமாற்றி கொள்ளகூடாது அப்படி தான் செய்துள்ளார் சமுத்திரகனி.

அருமையான கதைகரு. எதுக்கும் தற்கொலை முடிவாகாது என்ற கருவை சுமந்த இயக்குனர் ஆனால் அதை கிளைமாக்ஸ் மட்டிலுமே சொல்வது மிகவும் கொடுமை வழி முழுவதும் முள் பாதை போட்டு நடக்க சொல்லி இறுதி கோட்டை தொடும் பொழுது மலர்தூவியது போலவே படம் இருந்தது என்று தான் சொல்லணும்

அதுல்யா ரவி அழகிய பெண் தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு சினேகா மாதிரியான லட்சணமா பெண் கிடைத்து இருக்கிறாள் என்ற நினைப்புக்கு ஆப்பு. காரணம், கவர்ச்சியை மட்டுமே காண்பித்துள்ளார் அது அவருக்கு அருவருப்பாகத்தான் உள்ளது. தேவை இல்லாமல் இவர் இந்த படத்தில் புகைபிடிக்கிறார் எதற்கு ஏன் என்று தெரியவில்லை கேட்டால் இன்றைய காலத்துக்கு ஏற்ப ஒரு நாயகி பாத்திரம் என்பார்கள்.

படத்தில் நாயகனாக அறிமுகமாகும் சாம் ஜோன்ஸ் மற்றும் ரோசினி தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்து இருகிறார்கள். குறிப்பாக சாம் ஜோன்ஸ் கதைகளத்தை புரிந்து அதற்கு உயிர் கொடுத்துள்ளார் ரோசினி அவரும் சிறப்பாக நடித்துள்ளார் ரோஷினி சமுத்திரகனிக்கு ஜோடி என்று பார்க்கும் போது கொஞ்சம் நெருடலாக உள்ளது

பாலசரவணன் எப்போதும் போல தன் நகைசுவையின் மூலம் படத்துக்கு கொஞ்சம் ஆறுதலாக உள்ளார் என்று தான் சொல்லணும் ஒரு நல்ல கதையை நாகரிக சினிமா என்று சாகடித்தது கொஞ்சம் வேதனை காதலுக்கும் காமத்துக்கும் நிறையவே வேறுபாடுகள் உள்ளது என்று ஏன் புரியவில்லை என்று தெரியவில்லை நாட்டில் நடப்பது தான் திரைப்படம் ஆம், உண்மை தான். ஆனால், அது நாலு சுவற்றில் நடக்குது குடும்ப பெண்களும் பண்பாட்டை மதிக்கிறவங்க இன்னும் இந்த நாட்டில் உள்ளனர் என்பதை மறக்க கூடாது

படத்தில் தேவையில்லாத க்ளோஸ்அப் காட்சிகள் அது அனைத்தும் ஆபாசமே தான் என்று சொல்லணும் சிறந்த ஒளிப்பதிவாளர் ஆனால், அவரின் தொழில்நுட்பம் கதையை விட ஆபாசத்துக்கு அதிகமாக பயன்படுத்தியுள்ளார் இயக்குனர். பாடல்கள் மனதை கவரவில்லை

மொத்தத்தில் ஏமாளி நாகரிக கோமாளி Rank 2.5/5

Leave a Reply