Tuesday, April 21
Shadow

சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு துணைநிற்பேன் அவர் வழிநடப்பேன் சொன்ன பிரபல ஹீரோ

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது சேலத்தை சேர்ந்த மாணவன் யோகேஸ்வரன் உயிரிழந்த செய்தியை பத்திரிகைளில் பார்த்தேன். அவரது குடும்பம் மிகவும் ஏழ்மையில் இருப்பதை தெரிந்ததும். நேரில் வந்து ஆறுதல் கூறவேண்டும் என்று தோன்றியது.

அதன்படி நேரில் வந்து யோகேஸ்வரன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினேன். அவனது பெற்றோர்கள் எனது மகன் யோகேஸ்வரன் இருந்திருந்தால் எங்களை நல்ல முறையில் பார்த்து கொள்வான் என்று கூறினார்கள். நான் உங்களுக்கு முதல் மகனாக இருந்து. அவர் செய்யவேண்டிய கடமைகளை நான் உங்களுக்கு செய்கிறேன் என்று ஆறுதல் கூறினேன்.

அதன்படி அவர்களுக்கு நான் இப்போது வீடு கட்டி கொடுத்துள்ளேன். இதுபோன்று நான் செய்யும் உதவிகளை சிலர் நான் அரசியலுக்கு வருகிறேன் என்று கூறுகிறார்கள். நான் கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு உதவிகள், செய்து வருகிறேன்.

முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லம் நடத்தி வருகிறேன். 142 பேருக்கு இருதய சிகிச்சைக்கு உதவி செய்துள்ளேன். இதை அரசியலுக்கு வந்துதான் செய்ய வேண்டும் என்று இல்லை. ரஜினிகாந்த் எனது குரு. அவர் மக்களுக்கு சேவை செய்யும் எண்ணம் கொண்டதால் தான் அரசி யலுக்கு அவர் வந்துள்ளார்.

ரஜினி, கமல் இருவரும் மக்களுக்கு சேவை செய்யும் எண்ணத்தில் அரசியலுக்கு வருகிறார்கள். இருவரும் இணைந்து செயல்பட்டால் நல்லது என்பது எனது விருப்பமாகும்.

நான், ரஜினி அரசியலுக்கு வந்ததும், அவருக்கு துணையாக நிற்பேன் என்று கூறியதும் எனது தாய் மற்றும் நான் நடத்தி வரும் ஆதரவற்ற இல்ல குழந்தைகளும் அச்சத்தில் இருந்தனர்.

எனது தாய்க்கு அரசியல் என்பது சேவை செய்வது என்று எப்போது தெரிகிறதோ அன்று நான் அரசியலுக்கு வருவேன். மக்களுக்கு சேவை செய்யும் எண்ணம் கொண்டவர்கள் யார்வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply