Tuesday, April 21
Shadow

மீண்டும் தள்ளிப்போன 2.0, முந்திய காலா

சங்கர் இயக்கத்தில் ரஜினி – அக்‌ஷய் குமார் – ஏமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி வரும் 2.0 படம் ஏப்ரலில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்தின் கிராபிக்ஸ் பணிகள் இன்னமும் முடிவடையாததால் காலா படத்தை ஏப்ரல் 13ல் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருக்கின்றனர்.

`கபாலி’ படத்திற்கு பிறகு பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ‘காலா’ படத்திலும் ரஜினி வயதான தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

சென்னை, மும்பை பகுதிகளில் படமாக்கப்பட்டு வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், ரஜினி கடைசியாக டப்பிங் பேசி முடித்தார்.

தற்போது இறுதி கட்ட பணிகளில் படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13-ம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தில், ரஜினி ஜோடியாக ஈஸ்வரி ராவ் நடிக்கிறார். நானா படேகர், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, மிகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், சுதன்ஷூ பாண்டே, அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், அருந்ததி, சாக்ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கருப்பு நம்பியார், யதின் கார்கேயர், ராஜ் மதன், சுகன்யா என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர்.

Leave a Reply