Thursday, April 30
Shadow

சிம்பு வாய்ப்பை தட்டி பறித்த மாதவன்

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா, வி.டி.வி.கணேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2010-ம் ஆண்டு வெளியான படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் வெளியான இப்படத்தை மதன், எல்ரெட் குமார், ஜெயராமன் இணைந்து தயாரித்தார்கள். தமிழ் திரையுலகில் காதலர்கள் மத்தியில் மிகவும் கொண்டாடப்பட்ட படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. தற்போது வரை இப்படத்தின் பாடல்களுக்கு வரவேற்பு இருக்கிறது.

சமீபத்தில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் 2-ம் பாகம் குறித்த தனது எண்ணம் குறித்து விழா ஒன்றில் பேசிய கெளதம் மேனன். ”விண்ணைத்தாண்டி வருவாயா 2′-ம் பாகத்தில் 4 நாயகர்கள் இருப்பார்கள், அதில் சிம்பு ஒருவராக இருப்பார். இப்படத்தில் கார்த்தி மறுபடியும் ஜெஸ்ஸியை 7 ஆண்டுகள் கழித்து சந்திப்பது தான் கதைக்களமாக இருக்கும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா 2’-ம் பாகத்தில் சிம்புவுக்கு பதிலாக மாதவன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதை மாதவன் தன் ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

மாதவனின் சினிமா பயணத்தில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா 2’ மிக முக்கியமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கௌதம் மேனனின் முதல் படமான ‘மின்னலே’வில் மாதவன் நடித்தது நினைவு கூரத்தக்கது.