
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் டிஜிட்டல் நிறுவனங்களை கட்டண குறைப்பு செய்யுமாறு வலியுறுத்தி மார்ச் 1 முதல் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் செய்வதை நிறுத்தி வைத்துள்ளனர்.
ரஜினியின் அரசியலா காலா டீசர்?- வீடியோ
சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் டிஜிட்டல் நிறுவனங்களை கட்டண குறைப்பு செய்யுமாறு வலியுறுத்தி மார்ச் 1 முதல் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் செய்வதை நிறுத்தி வைத்துள்ளனர்.
இதனால் கடந்த ஒரு வார காலமாக தமிழக திரையரங்குகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. புதிய படங்கள் ரிலீஸ் ஆகாததால்கடந்த ஒரு வார காலத்தில் திரையரங்கு களுக்கு சுமார் 10 கோடி ரூபாய் வியாபார வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இம்முடிவுக்கு ஆதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை என்ற நிலைப்பாட்டை கடைப்பிடித்து வந்தது திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம். சென்னையில் பொதுசெயலாளர் ரோகிணி பன்னீர்செல்வம் தலைமையில் சங்கத்தின் அவசர கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் சுப்பிரமணி, ராஜமன்னார், வேலூர் சீனு, தென்காசி பிரதாப் ராஜா மற்றும் 150க்கும் மேற்பட்ட தியேட்டர் அதிபர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை நகரில் இருந்து யாரும் இக்கூடட்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு எதிராக முக்கியமான முடிவுகள் எடுக்கப்படலாம் என திரையுலகினர் எதிர்பார்த்த நிலையில் தமிழக அரசுக்கு எதிராக போர் கொடி தூக்கி மார்ச் 16 முதல் தமிழகத்தில் தியேட்டர்களை மூடுவது என முடிவெடுத்துள்ளனர்.
கடந்த வருடம் GST வரி விதிப்புக்கு எதிராகதியேட்டர்கள் மூடப்பட்ட போது தமிழக அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சில கோரிக்கைகள் ஏற்கப்பட்டு அரசு ஆணை பிறப்பிக்கப்படும் என அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாம்
