
டி. கே. பட்டம்மாள் என்ற இவரின் இயற்பெயர் தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள். பாடகி நித்யஸ்ரீ மகாதேவன், இவரது பேத்தி ஆவார்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் ஆண்களே கோலோச்சி வந்த கருநாடக இசை மேடைகளில் தங்கள் இசைத்திறமையால் ‘பெண் மும்மூர்த்திகள்’ என நிலைநாட்டிக்கொண்ட மூவரில் ஒருவர் மற்றவர்கள் எம். எஸ். சுப்புலட்சுமியும் எம். எல். வசந்தகுமாரியும் ஆவர்.

1929 ஆம் ஆண்டில் தனது 10வது அகவையில் முதற்தடவையாக வானொலியில் பாடினார். அந்த பாடலுக்குப் பிறகு தான் டி.கே.பட்டம்மாள் என்ற பேர் பிரபலமானது. அதன் பின்னர் மூன்று ஆண்டுகளின் பின்னர், 1932 இல் எழும்பூர் மகளிர் மன்றத்தில் தனது முதல் கச்சேரியை அரங்கேற்றினார். பின்னர் காங்கிரஸ் கூட்டங்களில் நிறைய பாட ஆரம்பித்தார்.

மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பாடல்களைத் தமது மேடைக் கச்சேரிகளிலும் திரைப்படங்களிலும் பாடிவந்தார். பாபநாசம் சிவன், கோபாலகிருஷ்ண பாரதி மற்றும் முத்துத் தாண்டவர் பாடல்களையும் பதங்களையும் பாடி தமிழ் பாடல்களின் சிறப்பை பறைசாற்றினார்.
பட்டம்மாள் பல வெளிநாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறார். அவரது சீடர்கள் ஜப்பான், சிங்கப்பூர், பிரான்சு, ஜெர்மனி, அமெரிக்கா, கனடா முதலிய நாடுகளில் உள்ளனர். ஜப்பானிய ‘அகிகோ’வை திருவையாற்றில் பாட வைத்திருக்கிறார்.
இவர் பெற்ற விருதுகள்
சங்கீத நாடக அகாடெமி விருது, பத்ம பூசண், இசைப்பேரறிஞர் விருது,
சங்கீத கலாசிகாமணி விருது, வழங்கியது: தி ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி, பத்ம விபூசண், தேசியகுயில், சங்கீத கலாநிதி, கலைமாமணி விருது, காளிதாஸ் சம்மன் விருது
