Monday, April 20
Shadow

நடிகர் தனுஷ் பிறந்த தினம் இவரை பற்றிய சில குறிப்புகள்

தனுஷ் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான அவரது முதற் திரைப்படமான துள்ளுவதோ இளமையில் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்.

பெரிய வெற்றி பெற்ற இத்திரைப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் செல்வராகவனின் இயக்கத்தில் நடித்த காதல் கொண்டேன் திரைப்படமும் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தின் மூலமாக, தனுஷ் ஒரு சிறந்த நடிகர் என்ற பாராட்டையும் பெற்றுக் கொண்டார். இதன் பிறகு வெளியான திருடா திருடி மற்றும் தேவதையைக் கண்டேன் போன்ற திரைப்படங்களின் மூலமாக தனது திரையுலக செல்வாக்கை நிலைநிறுத்திக் கொண்டார்.

இவர் ஆடுகளம் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக 2011ல் சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய விருதைப் பெற்றார். 3 என்ற தமிழ் திரைப்படத்திற்காக 2011 ஆம் ஆண்டு இறுதியில் இவர் பாடிய ஒய் திஸ் கொலவெறி டி என்ற பாடல் யூடியூப் இணையதளத்தில் வெளியாகி சில மணி நேரங்களிலேயே அதிகம் பேரால் பர்வையிடப்பட்டதால் ஓரிரு நாட்களில் தேசிய அளவில் பேசப்பட்டார்.

தனுஷ் திரைப்பட இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் இரண்டாம் மகன் ஆவார். இயக்குநர் செல்வராகவன் இவரது சகோதரர். 2004-ஆம் ஆண்டில் தனுஷ், பிரபல தமிழ் நடிகர் ரஜனிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கம் என்ற இரு மகன்கள் இருக்கின்றனர்.

தனுஷ் ஒரு நடிகராக மட்டும்மில்லாது ஒரு பாடகராகவும், தயாரிப்பாளராகவும் உள்ளார்.

இவர் நடித்த திரைப்படங்கள்

மாரியப்பன், வட சென்னை, ப.பாண்டி, எனை நோக்கி பாயும் தோட்டா, துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், திருடா திருடி, புதுக்கோட்டையிலிருந்து சரவணன், சுள்ளான், ட்ரீம்ஸ், தேவதையைக் கண்டேன், அது ஒரு கனாக்காலம், புதுப்பேட்டை, திருவிளையாடல் ஆரம்பம், பரட்டை என்கிற அழகுசுந்தரம், பொல்லாதவன், யாரடி நீ மோகினி, குசேலன், குட்டி, உத்தமபுத்திரன், ஆடுகளம், சீடன், மாப்பிள்ளை, வேங்கை, மயக்கம் என்ன, 3 (திரைப்படம்), கமத்&கமத்,
எதிர்நீச்சல், அம்பிகாபதி, மரியான், நய்யாண்டி, வேலையில்லா பட்டதாரி, அனேகன், ஷமிதாப், மாரி, தங்க மகன், தொடரி, கொடி, வேலையில்லா பட்டதாரி-2

இவர் தயாரிப்பாளராக பணியாற்றிய படங்கள்

3, எதிர்நீச்சல், காக்கா முட்டை, வேலையில்லா பட்டதாரி, காக்கி சட்டை, நானும் ரவுடி தான்

இவர் பாடகராகி பாடல் பாடிய திரைப்படங்கள்

புதுக்கோட்டையிலிருந்து சரவணன், தேவதையைக் கண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன

இவர் இயக்கிய படம்.

பவர் பாண்டி