Thursday, May 14
Shadow

மேற்கு தொடர்ச்சி மலை – திரைவிமர்சனம் (வாழ்கை) Rank 4.5/5

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்கள் வந்தாலும் மண் சார்ந்த படங்கள் வருபது அரிது என்று தான் சொல்லணும் அதே போல யதார்த்த சினிமாவை பார்ப்பதும் அரிது என்று தான் சொல்லணும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து புதுமகங்களை வைத்து வெற்றி என்பது சுலபமான காரியம் இல்லை அதை மேற்கு தொடர்ச்சி மலு குழுவினர்கள் சாதித்து உள்ளனர் என்று தான்சொல்லனும்.

பொதுவாக லாபதுக்குதான் படம் எடுப்பார்கள் ஆனால் கலையை நேசித்து படமெடுப்பவர்கள் என்றால் யாரும் இல்லை அதை அந்த குறையை நிவர்த்தி செய்கிறார் தயாரிப்பாளர் விஜய் சேதுபதி ஆம் இவர் தேர்ந்த்டுக்கும் கதைகள் தான் வித்தியாசம் என்றால் தாந்த்யாரிக்கும் படமும் வித்தியாசம் இருக்க வேண்டும் என்று மிக சிறப்பான படத்தை தயாரித்திருக்கிறார் விஜய் செதுபதி

தமிழ் ரசிகர்கள் நிச்சயம் ஆதரவு கொடுத்து வெற்றி பெற செய்தால் மேலும் பல நல்ல படங்கள் வரும் என்பதில்சந்தேகம் இல்லை என்று சொல்லலாம்.

மேற்கு தொடர்சி மலை படத்தின் கதை, மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வசிக்கும் மக்களின் வாழ்க்கையை பற்றியதாகும்

இந்த படம், கதாநாயகன் ரங்கசாமி அக்ராக் ரங்கு (ஆண்டனி)-வின் வாழ்க்கையில் ஒரு நாளில் நடக்கும் சம்பவங்களுடன் தொடங்குகிறது. கதாநாயகன் ராங்கு தமிழ்நாடு-கேரளா எல்லையில் உள்ள மேற்கு தொடர்சி மலையின் அடிவாரத்தில் வசித்து வருகிறார். அதிகாலை எழும் அவர், தனது வேலைக்கு செல்ல தயாராகிறார். அவருடன் நாமும் பயணிக்க தொடங்கி விட்டோம்.

தினக்கூலியான இவர், மலையில் இருந்து ஏழைக்காய்களை ஏற்றி கொண்டு கீழே உள்ள கிராமத்திற்கு கொண்டு வருவது தான் அவரது வேலை. அவர் வழக்கமான வேலை செய்வதை காட்டுவதில் தனக்கு தேவையான நேரத்தை எடுத்து கொண்டார் லெனின் பாரதி.

வழக்கமாக ராங்கு தனது நண்பனான கீதாரா-வை பிக்கப் செய்கிறார். மேலும் மலை மேல் வசிக்கும் தனது உறவினர்களை சந்திக்கிறார். மெதுவாகவும், பார்த்து பார்த்து இந்த கேரக்டர்கள் மலை ஏறி செல்கின்றனர். பாதி வழியில் ஓய்வு சில நேரம் ஓய்வு எடுத்து விட்டு செல்ல முடிவு செய்து விட்டு பின்னர் தொடர்ந்து மேலே ஏறி செல்கின்றனர். இவர்கள் செல்லும் மலையையும் மொத்த மாகாணத்தையும் மிகவும் அழக்காக கேமிரா படம் பிடித்துள்ளது. இதற்கு ஒளிபதிவாளர் ஈஸ்வருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

படத்தில் மூன்று மலைகளை பார்ப்பதோடு, அந்த கேரக்டர்கள் நாள்தோறும் நடந்து செல்வதையும் கவனிக்கிறோம். மலையின் மேல்பகுதில், அழகிய கேரக்டர்கள் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். சகோ (அபு வளையங்குளம்) இந்த பகுதியின் தொழிலாளர்களுக்கான ஆர்வலர், கண்காணி (அந்தோனி வாத்தியார்) சூப்பர்வைசர், ரவி (ஆறுபாலா) எஸ்டேட் ஒனர் மற்றும் பாக்கியம் (சொர்ணம்) அவள் அந்த பகுதியில் தேனீர் விடுதி நடத்துகிறார். இந்த பகுதியில் லோடுகளை ஏற்றி செல்ல கழுதைகளை பயன்படுத்துகின்றனர்.

இயக்குனர், ஒவ்வொரு சீனிலும், மலை கிராமத்தையும் அங்கு வசிக்கும் மகளையும், அவர்களுக்கு தேவையான உதவிகளை எப்படி செய்து கொள்கிறார்கள் என்பதையும் அழகாக காட்டுகிறார். இங்கு பணம் இரண்டாம் பட்சமாகவே இருக்கிறது. பண்டாமாற்று முறையால் அவர்களது பொருளாதார தேவைகள் எப்படி நிறைவு பெறுகிறது என்பதையும், எந்த ஒரு கேரக்டரும் பணத்தை பற்றி பேசமால் இருப்பது எல்லாம் நன்றாக இருக்கிறது

ராங்குவின் கனவு, தனக்காக சொந்தமாக ஒரு விவசாய நிலம் வாங்க வேண்டும் என்பதே. இது படத்தின் இரண்டாம் பகுதியில் உண்மையாகிறது. உண்மையில், இன்டர்வெல்க்கு முந்தைய பகுதியில் இருப்பதை விட இரண்டாம் பகுதியில் நிறைய சம்ப்வங்கள் நடக்கிறது.

பாடல்களை பொறுத்தவரையில், ராங்கு- ஈஸ்வரி (காயத்ரி கிருஷ்ணா) திருமணம், அவர்களது உறவினர்கள், குழந்தை பிறப்பது, அந்த குழந்தை வளர்வது என்ற நிலையில் பாடல் நிறைவு பெறுகிறது. மற்ற இடங்களில் மெல்லிதாகவே இந்த செக்மென்ட் இருந்து வருகிறது. ராங்குவின் கனவு நினைவாகும் இடத்தில் அதிகளவில் மெலோடியாக உள்ளது. இளையராஜாவின் இசை என்பதை பல இடங்களில் புரிந்து கொள்ள முடிகிறது.

கிளைமேக்ஸ்-க்கு முந்திய பகுதிகள் ஏற்று கொள்ளதக்கதாக இல்லாமல் போனது ஏன் என்று தெரியவில்லை. ரவி சிறந்த வில்லனாக நடித்துள்ளார். படத்தில் ராங்குவின் பங்கு சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக வில்லன் ரவியின் செயலால் பாதிக்கப்படும் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். ஆனால், படம் முடியும் போது, மேம்பாட்டு பணிகளால் காடுகள் அழிக்கப்படுவதுடன் அங்கு வாழும் சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்பையும் விளக்கும் கருத்தை சொல்வதுடன் முடிவடைகிறது.

காடுகளை அழித்து சாலை போடும் திட்டம் குறித்து பேசப்படும் தற்போது உள்ள சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் இந்த படம் அமைந்துள்ளது.

மொத்தத்தில் யதார்த்த வாழ்கையை படமாக்கியுள்ளார்கள். Rank 4.5/5