பத்திரிக்கையாளர்கள் எனக்கு கொடுத்த மிக பெரிய பாடம் – விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி தயாரிப்பில் லெனின் பாரதி இயக்கத்தில் வெளிவந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் பத்திரிக்கையாளர்கள் தான் என்று அவர்களுக்கு நன்றி சொல்ல விஜய் சேதுபதி ஒரு கூட்டம் ஏற்பாடு செய்தார்.
இதில் இந்த படத்து இயக்குனர் லெனின் பாரதி பல வருடங்களாக நான் சுமந்தாய் சுமையை இறக்கிவைத்து எனக்கு மிக பெரிய வெற்றியை சிறந்த விமர்சனம் மூலம் பெற்று தந்த பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி கூறினார் .இதை தொடர்ந்து பட குழுவினர் அனைவரும் நன்றி தெரிவித்தனர். படத்தின் நாயகன் ஆண்டனி இந்த படம் நடிக்க ஆறஅம்பிக்க போது எனக்கு திருமணம் ஆகவில்லை இன்று என் மகள் ஒன்றாம் வகுப்பு படிக்கிறாள் ஆனாலும் இந்த வெற்றி எங்கள் காத்திருப்புக்கு மிக பெரிய பரிசு என்றார்
பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நேற்றுமுன் சென்னையில் நடந்தது. அப்போது பேசிய விஜய்...