Monday, October 13
Shadow

பழம்பெரும் நடிகை மற்றும் பின்னணிப் பாடகி எஸ். வரலட்சுமி மறைந்த தினம்

அவரது பாடல்கள் மற்றும் வேடங்களுக்காக தமிழில் வீரபாண்டிய கட்டபொம்மன், சவாலே சமாளி மற்றும் தெலுங்கில் மகாமந்திரி திம்மரசு, வேங்கடேசுவர மகாத்மியம் ஆகிய திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கன.

வரலட்சுமி ஆந்திராவில் உள்ள ஜக்கம்பேட்டையில் பிறந்தவர். சிறுவயதிலிலேயே பாலயோகினி என்ற திரைப்படத்தில் நடிக்க துவங்கினார். எஸ். வரலட்சுமி 1938-ம் ஆண்டு கே. சுப்பிரமணியம் (நடன கலைஞர் பத்மா சுப்பிரமணியத்தின் தந்தை) தயாரித்த “சேவாசதனம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தெலுங்கில் நாகேஸ்வரராவ் உடன் “பால்ராஜ்’ படத்தில் அறிமுகமானார். ஏவிஎம்-ன் “ஜீவிதம்’ உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். திரைப்படத் தயாரிப்பாளரும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவருமான ஏ.எல். சீனிவாசனை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு முருகன் மற்றும் நளினி என இரு குழந்தைகள் உள்ளனர். ஒரு பேரனும் ஒரு பேத்தியும் உள்ளனர். திருமணத்திற்கு பின்னரும் தமிழ்,தெலுங்கு திரைப்படங்களில் வயதான வேடங்களில் நடித்து வந்தார்.

தான் நடித்த அனைத்து படங்களிலும் சொந்தக் குரலிலேயே பேசி, பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்

சுவப்னசுந்தரி, எதிர்பாராதது, சதி சக்குபாய், சக்கரவர்த்தி திருமகள், சதி சாவித்திரி, மாங்கல்ய பலம், லவ குச, சத்ய அரிச்சந்திரா, பாமா விஜயம், ஆபூர்வ பிறவிகள், நத்தையில் முத்து, குணா, வீரபாண்டிய கட்டபொம்மன், கந்தன் கருணை, ராஜராஜ சோழன், பூவா தலையா, சவாலே சமாளி, நினைத்ததை முடிப்பவன், நீதிக்குத் தலைவணங்கு, மாட்டுக்கார வேலன், பணமா? பாசமா?, அடுத்த வாரிசு, குணா, கந்தன் கருணை, வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகிய திரைப்படங்களில் பாடல்களும் பாடினார்.