
தமிழ்த் திரைப்படம் சீடன் மூலம் இவர் நடிகராக அறிமுகமானார். தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் இருபத்தியைந்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
2002 இல் மலயாளத்தில் பிரிதிவிராஜின் நடிப்பில் வெளியான நந்தனம் திரைப்படத்தின் தமிழ் பதிப்பான சீடன் திரைப்படமே உன்னி முகுந்தனின் முதல் திரைப்படம். அதன் பிறகு பல சிறு சிறு வேடங்களில் நடித்தார். உன்னி முகுந்தனிற்கு மிகப் பெரிய வெற்றியை தந்தது இயக்குநர் வைசாக்கின் மலையாளத் திரைப்படமான மல்லு சிங்(2012). முதலில் இத்திரைப்படத்தில் நடிக்க பிருதிவிராஜ் ஒப்பந்தமானர். பிறகு அவரால் நடிக்க முடியாத காரணத்தினால் சிறு வேடத்தில் நடிக்க ஒப்பந்தமான உன்னி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார். இத்திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை ஈட்டியதால் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புகள் உன்னியிற்கு கிடைக்கத் தொடங்கின. ஐ லவ் மீ (2012), இது பாத்திரமானால் (2013), விக்ரமாதித்யன் (2014), கேஎல் 10 பத்து (2015), ஸ்டைல் (2016), காட்டும் மழையும் (2016), ஒரு முறை வந்து பார்த்தாயா (2016), அச்சையன்ஸ் (2017), கிளையன்ட் (2017), and மாஸ்டர் பீஸ் (2017) ஆகியவை உன்னி முகுந்தன் பெரிய கதாப்பாத்திரங்கள் ஏற்று நடித்த படங்களாகும். உன்னி முகுந்தன் தெலுங்கில் அறிமுகமானது 2016 ஆம் ஆண்டு ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான ஜனதா கேரேஜ் திரைப்படம் ஆகும். இவர் மலையாளத்தில் மம்முட்டியின் நடிப்பில் வெளியான பாம்பே மார்ச் 12 மூலம் அறிமுகமானார்.[3] டி.கே.ராஜ்குமாரின் தல்சமயம் ஒரு பெண்குட்டி எனும் திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரம் ஏற்று நடித்தார்.
2016 ஆம் ஆண்டு ஜனதா கேரேஜ் எனும் திரைப்படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார் உன்னி முகுந்தன். இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை ஈட்டியதுடன் எட்டு நாட்களில் நூறு கோடி வசூலைத் தாண்டியது. 2017 இல் வெளிவந்த அச்சன்ஸ் திரைப்படம் மூலம் பின்னனிப் பாடகராகவும் அறிமுகமானார்.
