
திரைத்துறையிலும், தொலைக்காட்சி நாடகங்களிலும் சுமார் 60 ஆண்டுகள் நடித்தவர். நாடகத்துறையின் சிறந்த நடிகராக தமிழக அரசின் கலைமாமணி விருதினை 1995 ஆம் ஆண்டு பெற்றார்.
இமைகள், தூரத்து இடி முழக்கம், அபிமன்யு, தங்க பாப்பா, முகமது பின் துக்ளக், விருதகிரி, அழகன், முதல் வசந்தம், மனசுக்கேத்த மகராசா, ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். 25 செப்டம்பர் 2017 அன்று உடல்நலக் குறைவு காரணமாக தனது 79 ஆவது வயதில் மதுரையில் காலமானார்.
