
நேற்று நடந்த விஜயின் சர்கார் இசைவெளியீடு நிகழ்ச்சியில் மிகவும் நெகுழ்ச்சியுடன் உரையாடிய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் விஜயை பற்றி பேசிய பொது மிகவும் உணர்ச்சிபூர்வமான வரிகளை பயன்படுத்திய இயக்குனர்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சர்கார்’. தீபாவளிக்கு வெளியாக உள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.
இதில் முருகதாஸ் பேசுகையில், ”இதயத்தைத் தொடும் படமாக ‘சர்கார்’ இருக்கும். இதுவரை பார்க்காத ஆக்ஷன் படமாக இருக்கும். சில வசனங்கள் நான் எழுதினேனா, விஜய் சார் எழுதினாரா என்று தெரியாத அளவுக்கு அவர் பிரமாதமாக நடித்திருக்கிறார். சிலர் மட்டும் தான் அந்தக் கதாபாத்திரத்துக்கு வலிமையாகப் பொருந்திப் போவார்கள். அப்படி விஜய் சார் கச்சிதமாக இருக்கிறார். இதை நான் முகஸ்துதிக்காகச் சொல்லவில்லை.
விஜய் சார் என்ற மிகப்பெரிய ஆயுதத்தை வைத்துக்கொண்டு நான் பூக்கடை வைக்க முடியாது. அதனால் பெரிய பீரங்கி வண்டிகளை வைத்திருக்கிறேன். நான் மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருந்து வந்தவன். வலிகள் பழகியவன். அரசியல் என்பதை பெயர் மாற்றி, உருவம் மாற்றி சட்டையர் மாதிரி படத்தில் சொல்லவில்லை.
உண்மையை இதயத்திலிருந்து சொல்லியிருக்கிறேன். தீபாவளியில் உங்களுக்கு சர்கார் படம் பார்க்கும் போது தெரியும். மூன்றாவது முறையாக இணைந்து படம் பண்ணதற்காக விஜய் சாருக்கு நன்றி. விஜய் சாருடன் வேலை செய்த துப்பாக்கி, கத்தி ஆகிய இரண்டு படங்களைக் காட்டிலும் சர்கார் பெரிய அளவில் பேசப்படும்” என்றார் முருகதாஸ்.
இதன் மூலம் விஜய்யை வைத்து முருகதாஸ் முழுக்க முழுக்க அரசியல் பேசியிருப்பது உறுதியாகியுள்ளது.
