
தாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆண் தேவதை’. சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன், சுஜா வாருணி, ராதாரவி, இளவரசு, காளி வெங்கட், ஹரீஷ் பெராடி, அபிஷேக், மாஸ்டர் கவின் பூபதி, பேபி மோனிகா மற்றும் பலர் நடித்துள்ள இந்தப்படத்தை தனது ‘சிகரம் சினிமாஸ்’ நிறுவனத்துடன் ஃபக்ருதீன் என்பவருடன் இணைந்து தயாரித்துள்ளார் தாமிரா.
விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வரும் 12-ம் தேதி இந்தப்படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் படம் குறித்து நடிகை சுஜா வாருணி பேசும்போது, ”தாமிரா சார் போனில் இந்தக் கதையைச் சொன்னவுடனேயே இதில் நடிக்கவேண்டும் என எனக்குத் தோன்றியது. அவரோட ‘ரெட்டசுழி’ படமே எனக்கு ரொம்பப் பிடிக்கும்.. அதில் அஞ்சலி கேரக்டரை பார்த்தபோது, ஏன் நமக்கு இப்படியெல்லாம் ஒரு கேரக்டர் வரமாட்டேங்குது என நினைப்பேன். அந்த ஏக்கம் இதில் பூர்த்தியாகி உள்ளது.
‘ஆண் தேவதை’ படத்தில் திருமணமாகி ஐடி நிறுவனத்தில் வேலைக்குப் போகும் பெண்ணாக வருகிறேன். இன்றைய சமூகத்தில் எப்படி ஸ்டைலிஷா வாழலாம் என்பதற்கு ஒரு கெட்ட உதாரணமான பெண்ணாக நடிச்சிருக்கேன். என்னைத் திட்டாம படம் பாருங்க” என முன்கூட்டியே கோரிக்கை விடுக்கிறார் சுஜா.
