“நாங்கள் தோற்கவில்லை.. தோற்கடிக்கப்பட்டோம்” ; ஆண் தேவதை இயக்குனர் குமுறல்
ரெட்டச்சுழி படத்தின் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைத்த இயக்குனர் தாமிரா, சுமார் எட்டு வருட போராட்டங்களுக்கு பிறகு ‘ஆண் தேவதை’ என்கிற படத்தை இயக்கியுள்ளார். பல கடுமையான போராட்டங்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டு ஒருவழியாக இந்தப்படம் சில தினங்களுக்கு முன் ரிலீஸானது. படம் நன்றாக இருப்பதாக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இந்தப்படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைக்காதது மற்றும் தவறான விநியோகஸ்தர் கைகளில் இந்தப்படம் சென்றது என பல காரணங்களால் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளது ‘ஆண் தேவதை’.
இந்நிலையில் இந்தப்படத்தை வெளியிடுவதற்குள் தாங்கள் எவ்வாறெல்லாம் ஏமாற்றப்பட்டோம், எவ்வாறெல்லாம் அலைக்கழிக்கப்பட்டோம் என தனது மனக்குமுறல்களை பத்திரிகையாளர்களின் முன்னிலையில் வெளிப்படுத்தினார் இயக்குனர் தாமிரா.
“எனது சிகரம் சினிமாஸ் நிறுவனத்துடன் பக்ருதீன், முஸ்தபா மற்றும் குட்டி என எனது மூன்று நண்பர்களையும் த...