
இவர் ரிச்சர்ட் ரிசி இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். அதிகமாக தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வருகிறார். இவர், நடிகர் அஜித் குமாரின் மனைவியான சாலினியின் சகோதரர் ஆவார்.
ரிச்சர்ட், சென்னையில் குடியேறிய மலையாளக் குடும்பத்தில் பாபு, ஏலியஸ் இணையருக்கு 1977 அக்டோபர் 20 அன்று மகனாகப் பிறந்தார். 12ஆம் வகுப்பு வரை, லயோலா மெட்ரிக்குலேசன் பள்ளியில் கல்வி பயின்றார். இவரது இளைய சகோதரிகளான சாலினி, சாமிலி இருவரும் திரைப்பட நடிகைகள் ஆவர். இவரது தந்தை கேரளத்தின் கொல்லம் நகரைச் சேர்ந்தவர். தாயார் சென்னையில் குடியேறிய மலையாளக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை நடிகர் ஆவதற்காக சென்னைக்கு குடிபெயர்ந்தவர். இவர் மற்றும் இவரது சகோதரிகளும் பெரிய நடிகைகளாக திகழ்ந்ததன் மூலமாக, தான் பெரிய நடிகராக வேண்டும் என்கிற இவர்களது தந்தையின் இலட்சியத்தை நிறைவேற்றினர். அஜித் குமார், இவரது சகோதரி சாலினியின் கணவராவார்.
இவர் நடித்த திரைப்படங்கள்
அஞ்சலி, காதல் வைரஸ், கிரிவலம், நாளை, யுகா, வைரம், தமிழழகன், பெண் சிங்கம், நேர் எதிர், நினைத்து யாரோ, நேற்று இன்று, சுற்றுலா, மகராணி கோட்டை, அதிபர், கோலாட்டம், 0 முதல் 1 வரை, ஏன் இப்படி மயக்கினாய், இரண்டாவது படம்
