
இந்தியாவின் தலை சிறந்த இயக்குனர்களில் ஒருவர் ராஜ மௌலி இவரின் பாகுபலி படமிரண்டு பாகங்களும் உலக சினிமாவே பிரமித்து பார்த்தது அதோடுமிக பெரிய வசூல் மழியில் மூலம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது இவரின் அடுத்த படிப்புக்காக உலக சினிமா ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள் இந்த சூழ்நிலையில் ராஜமௌளியின் அடுத்த படத்தின் பூஜையுடன் நேற்று முன் தினம் ஆரம்பிக்கப்பட்டது
அதேசமயம் ராம்சரண்-ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து படம் இயக்கவுள்ளதாக தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை கடந்த மார்ச் மாதமே வெளியிட்டு ரசிகர்களை உற்சாகம் குறையாமல் பார்த்துக்கொண்டார் இயக்குனர் ராஜமவுலி. ஒருவழியாக இதோ தனது புதிய படத்திற்கு இன்று பிரமாண்டமாக பூஜையும் போட்டுவிட்டார்.
இந்த பூஜை நிகழ்வில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோருடன் மெகாஸ்டார் சிரஞ்சீவி, ராணா டகுபதி உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர். ராஜமவுலி இதுவரை இயக்கியுள்ள படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஜானரில் இந்தப்படம் இருக்கும் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.
