Saturday, November 7
Shadow

தமிழக முதலவர் ஆவார் தளபதி விஜய் புலி பட தயாரிப்பாளர் அதிரடி

தளபதி விஜய் இன்று தமிழ் சிநேம்கவின் முடிசூடா மன்னன் அதற்கு சாட்சி சர்கார் படம் தளபதி ஆரம்ப கட்டத்தில் இருந்து அவரின் மக்கள் தொடர்பாளராக இருந்தவர் செல்வகுமார் தான் அவரின் உழைப்புக்கு பரிசாக அவரை புலி படத்தின் தயாரிப்பாளராக ஆக்கினார் தளபதி சமீபத்தில் தளபதி அரசியல் வரவை பற்றி தயாரிப்பாளர் செல்வகுமார் பேசியுள்ளார்

விஜய்க்கு முதல்வர் ஆசை வந்துவிட்டதாக பலரும் சொல்லி வருகின்றனர். விஜய்யின் பேச்சுகள், திரைப்பட வசனங்கள் மற்றும் செயல்பாடுகள் எல்லாம் முதலமைச்சர் நாற்காலியை குறிவைத்தே இருக்கின்றன என்றும் பரவலான கருத்து நிலவுகிறது.

இந்த நிலையில், பந்தா பரமசிவம், புலி, போக்கிரி ராஜா போன்ற படங்களை தயாரித்த தயாரிப்பாளரும் இயக்குனருமான பிடி.செல்வகுமார், இன்னும் ஏழு ஆண்டுகளில் விஜய் அரசியலுக்கு வருவார் என தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில், விஜய் இன்னும் கொஞ்சம் நாளைக்கு படம் நடிக்கட்டும். அவரை எவ்வளவு அதிகமாக டார்ச்சர் செய்கிறீர்களோ அவ்வளவு சீக்கிரம் அரசியலுக்கு வருவார். விஜய்யின் ஜாதகத்தை வைத்துப் பார்க்கும்போது என்னுடைய கணிப்புப் படி இன்னும் ஏழு ஆண்டுகளில் அரசியலுக்கு வருவார் என தெரிவித்தார்

மேலும் அஜித்தும் அரசியலுக்கு வருவார் என்றும் ஆனால் இருவரின் ஜாதக அமைப்பையும் பார்க்கும்போது முதல்வராகும் கிரக நிலை விஜய்க்கே உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.