Tuesday, April 21
Shadow

அஜீத்தின் AK 59 படத்தில் நடிப்பவர்களின் பட்டியல் வெளியானது

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில், நடிகர் அஜீத் குமார் நடிக்கும் AK 59 படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2019 ஆண்டு கோடை காலத்தில் வெளியாக உள்ள இந்த படத்தின் சூட்டிங் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.

விஸ்வாசம் படத்தை அடுத்து அஜித், வினோத் இயக்கும் ‘பிங்க்’ படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கான பணிகள் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியுள்ளன.

பிங்க் படத்தில் அமிதாப்பச்சன் நடித்திருந்த கேரக்டரில் அஜித் நடிக்கிறார். நடித்திருந்த கேரக்டரில் அஜித் நடிக்கிறார். படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்க உள்ளார். இது அவருடைய முதல் தமிழ்ப்படம் ஆகும். செய்தி தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான ரங்கராஜ் பாண்டே இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். காஷ்மீரில் பிறந்து யூ-டர்ன் என்ற கன்னட திரைப்படம் மூலம் சிறந்த நடிகை விருதை வென்ற சாரதா ஸ்ரீநாத், டாப்ஸியின் கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். அடங்க மறு உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகையாக நடித்த அபிராமி வெங்கடாச்சலம் இந்தப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பிங்க் படத்தில் நடித்திருந்த ஆண்ட்ரீயா டாரியாங் இந்தப்படத்திலும் அதே கேரக்டரில் நடிக்க இருக்கிறார். ரம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள அர்ஜுன் சிதம்பரம், இந்தப்படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார். திரிஷா இல்லனா நயன்தாரா, ஏஏஏ படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் படத்தில் இடம்பெற்றுள்ளார்.நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார்

இதுகுறித்து தயாரிப்பாளர் போனிகபூர் தெரிவிக்கையில், ஏற்கனவே தெரிவித்ததை போன்று, நடிகர் அஜீத் குமாருடன் இணைந்து பட வேலைகள் தொடங்கப்பட்டு விட்டன். ஏற்கனவே இங்கிலீஷ் வின்கிலிஷ் படத்தில் அஜீத் உடன் பணியாற்றியுள்ளேன். இந்த படத்தில் பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இருந்தபோதும், அஜீத் குமாருடனான என்பது பயணத்தை இத்துடன் நிறுத்தி கொள்ள போவதில்லை. உடனடியாக புதிய படம் ஒன்றை வரும் ஜூலை மாதம் தொடங்கி 2020 ஏப்ரலில் வெளியிட உள்ளோம் என்றார்.

AK 59 படத்தில் நடிப்பவர்கள் குறித்து பேசிய போனிகபூர், இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர் பெயர்களும் போஸ்டரில் இடம் பெரும். இந்த படம் நல்ல கதையம்சம் கொண்டதாக இருப்பதுடன், பேவியூ புராஜெக்ட்ஸ் மூலம் உருவாக்கப்பட்டு வருகிறது.

இயக்குனர் வினோத், தனது திறமைகளை முளுமதையும் காட்டி பனியாற்றி வருகிறார். அவர் ஹிந்தி வார்த்தைகளை தமிழில் மொழி பெயர்த்துள்ள விதம் மிகவும் சிறப்பாக உள்ளது. இசையை பொறுத்தவரை யுவன் சங்கர் ராஜா சிறப்பாக பணியாற்றி வருகிறார். பல்வேறு திறமையானவர்கள் மூலம் உருவாக்கும் இந்த படம் பெரியளவில் வெற்றி பெறும் என்று நம்புகிறேன் என்றார்.

படத்தில் நடித்தவர்கள் குறித்து பேசிய அவர், வித்யாபாலன் கண்டிப்பாக தமிழ் ரசிகர்களை கவருவர். அஜீத்குமாருடன் ஜோடியாக நடித்துள்ளது இன்னும் சிறப்பாக அமைந்துள்ளது. ரங்கராஜ் பாண்டே முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மற்ற நடிகர்கள் தங்கள் பங்குக்கு சிறப்பாக நடித்து வருகின்றனர் என்றார்.