
பாலிவுட்டில் வெளியான ‘பிங்க்’ படத்தின் ரீமேக்கில் அஜித் நடிக்கிறார். இது அஜித்தின் 59வது படம். இதற்கு ‘நேர்கொண்ட பார்வை’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதனால் ‘தளபதி 63’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. எப்போது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனை ‘தளபதி 63’ படத்தின் தயாரிப்பாளரும், ஏஜிஎஸ் சினிமாஸ் சி.இ.ஓவான அர்ச்சனா கல்பாதியின் டுவிட்டரில் டேக் செய்து கொண்டிருக்கின்றனர்.
இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, அர்ச்சனா கல்பாதி தனது டுவிட்டரில் பதிவு ஒன்றை இட்டிருந்தார். அதில், ‘கத்தி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பதிவிட்டு, இது என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட் விஜய் சார் போஸ்டர்.

இதனை எங்கள் அலுவலகத்தைச் சேர்ந்த மிகவும் திறமை வாய்ந்த கோபி பிரசன்னா வடிவமைத்திருந்தார். இதேபோல் ‘தளபதி 63’ படத்திற்கு அற்புதமான டிசைனில் போஸ்டரை வெளியிடுவார் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு கோபி பிரசன்னா நன்றி தெரிவித்திருந்தார்.
