Sunday, November 8
Shadow

நகைச்சுவை நடிகர் பாலாஜி மறைந்த தினம் 

பாலாஜிவிஜய்  தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் மற்றும்  தொகுப்பாளராக அறிமுகமானார். பின்னர் பல சின்னத்திரை தொடர்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வந்தார். பேசாத கண்ணும் பேசுமே, சிலம்பாட்டம் உள்ளிட்ட 30-இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருந்தார். நடிகர் சந்தானம் மற்றும் ஜீவா போன்ற நடிகர்களை விஜய் டிவி மற்றும் சினிமாவுக்கு அறிமுக படுத்திய பெருமை இவருக்கு உண்டு
சில நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த பாலாஜி தனது 43வது அகவையில் 2014 மார்ச் 7 இல் மருத்துவமனையில் காலமானார்.பல்லாவரத்தை அடுத்த பம்மல் பகுதியில் வசித்து வந்த இவருக்கு மனைவி வனஜா, இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.