
நயன்தாராவின் அறம், பிரபுதேவாவின் குலேபகாவலி உள்ளிட்ட படங்களை தயாரித்திருந்த கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியான விஸ்வாசம் படத்தின் திரையரங்க உரிமையைப் பெற்றது.
‘விஜய் 63’ உரிமையைப் பெறும் ‘விஸ்வாசம்’ பட நிறுவனம்?
விஜய் – அட்லீ கூட்டணியில் உருவாகும் விஜய் 63 படத்தின் தியேட்டர் உரிமையை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
விஸ்வாசம் படத்தின் திரையரங்க உரிமையைப் பெற்ற கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் 13-ம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.
நயன்தாராவின் அறம், பிரபுதேவாவின் குலேபகாவலி உள்ளிட்ட படங்களை தயாரித்திருந்த கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியான விஸ்வாசம் படத்தின் திரையரங்க உரிமையைப் பெற்றது.
விஸ்வாசம் இந்நிறுவனத்துக்கு நல்ல லாபத்தை ஈட்டிக் கொடுத்தது. இதையடுத்து தற்போது தங்களது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வரும் 13-ம் தேதி வெளியிடுவோம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இந்த அறிவிப்பு என்னவாக இருக்கும் என்றும் ரசிகர்களிடம் கேள்வி எழுப்பினர். அதேவேளையில் ரசிகர்கள் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் அறிவிப்பு என்னவாக இருக்கும் என்பதை அறிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.
இந்தநிலையில் விஜய் – அட்லீ கூட்டணியில் உருவாகும் விஜய் 63 படத்தின் தியேட்டர் உரிமையை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் நடிகர் சிவகார்த்திகேயன் ரவிக்குமார் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் டைட்டிலாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
விஜய் 63 படம் குறித்த அறிவிப்பா அல்லது சிவகார்த்திகேயன் படம் சம்பந்தமான அறிவிப்பா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
