Saturday, April 18
Shadow

தயாரிப்பாளர் ஆகிறார் நிதின்சத்யா

நடிகர் நிதின்சத்யா ஷ்வேத்-எ நிதின் புரோடக்ஷன் ஹவுஸ் என்ற பட நிறுவனத்தை துவக்கி ஜருகண்டி படத்தை வெளியிட்டார். இதில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது தயாரிப்பாராக மாறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உங்கள் ஆதரவோடு நடிகனா அறிமுகமாகி பல படங்களில் நடித்து என்னை ஒரு நடிகனா நிலை நிறுத்தி, நமக்கு வாழ்க்கை கொடுத்த சினிமாவுக்கு நாம மறுபடியும் ஏதாவது செய்யணும்னு தயாரிப்பாளராக மாறி இருக்கிறேன்.

ஷ்வேத்-எ நிதின் புரோடக்ஷன் ஹவுஸ் என்ற பட நிறுவனத்தை துவக்கி ஜருகண்டி படத்தை வெளியிட்டார். இதில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது மறுபடியும் புதுமுக இயக்குனர் எஸ்ஜி சார்லஸ் இயக்கத்துல புது படம் தயாரிச்சுட்டு இருக்கேன். எஸ்ஜி சார்லஸ் பிரபல இயக்குனர் மோகன் கிட்ட ஒர்க் பண்ணவர்.

முதல் படத்துல என்னுடன் நடித்த நண்பன் ஜெய் நடித்தார், என்னோட நெருங்கிய நண்பன் வைபவ் இப்படத்துல ஹீரோவா நடிக்கிறார். முதல் முறையாக முழு நீல போலீஸ் ரோல் பண்ணறார். வாணி போஜன் ஹீரோயினா நடிக்கிறார். இதில் ஈஸ்வரி ராவ், பூர்ணா, மைம் கோபி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள்.

கிரைம் சஸ்பென்ஸ் திரில்லராக உருவாக்க இந்த படத்திற்கு ஆரோல் கரோலி இசையமைக்கிறார். எடிட்டிங்கை ஜெரால்ட் ஆனந்தும், கலை பணிகளை ஆனந்த் மணியும், சண்டை காட்சிகளை மிராக்கல் மைக்கேல் ஆகியோர் செய்து செய்துள்ளனர்.

சென்னையில் படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருப்பதால், விரைவில் படத்தின் பர்ஸ்ட் லூக் போஸ்டருடன் உங்களை சந்திக்கிறேன் என்றார்.